மின்சார கொள்முதலில் ஊழல் - அதிமுக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மின்சார கொள்முதலில் ஊழல் - அதிமுக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மு.க.ஸ்டாலின்

வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்து தமிழக அரசு ஊழல் செய்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

 • Share this:
  சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் திறந்தவெளி வேனில் பரப்புரை மேற்கொண்ட அவர், அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழக மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருவதாக கூறினார்.

  உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் மூன்று லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக கூறும் முதலமைச்சர் பழனிசாமி, அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் முதலமைச்சர் பழனிசாமி செல்லும் இடமெங்கும் பொய்ப் பிரசாரம் செய்து வருவதாக கூறிய ஸ்டாலின், சினிமா பாடலை பாடி விமர்சித்தார்.

  திமுக ஆட்சிக் காலத்திலே காவிரி - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், அத்திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தொடங்கி வைத்திருப்பதாகவும், இதனை தெரிந்து கொண்டதால்தான் பிரதமர் மோடி நதிகள் இணைப்பு திட்ட விழாவில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்தார்.

  ஜெயலலிதா இறந்த பிறகு நான்கு ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்கள் என்று கேள்வியெழுப்பிய ஸ்டாலின், கடந்த 5 ஆண்டுகளில் அமைச்சர்களின் சொத்து மதிப்பு பலமடங்கு உயர்ந்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

  அதைத்தொடர்ந்து தலைவாசல் பகுதியில் மு.க. ஸ்டாலின் வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, வேட்பாளர்களை பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தி ஆதரவு திரட்டினார். அங்கிருந்த ஏராளமானோர் ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
  Published by:Vijay R
  First published: