நான் ரெடி, நீங்க ரெடியா? முதல்வர் பழனிசாமி சவாலை ஏற்ற மு.க.ஸ்டாலின்

நான் ரெடி, நீங்க ரெடியா? முதல்வர் பழனிசாமி சவாலை ஏற்ற மு.க.ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்

அமைச்சர்கள் மீது கொடுத்துள்ள ஊழல் புகார்களை விசாரிக்க அனுமதி வழங்குமாறு, தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரிடம் ஒப்படைக்குமாறும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

 • Share this:
  ஊழல் பற்றி தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? என்று முதலமைச்சர் பழனிசாமி சவாலை ஸ்டாலின் ஏற்றுள்ளார்.

  இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்கள், 2021 மே மாதத்திற்கு பிறகு முழுமையாக தெரியும் என்று கூறியுள்ளார். சவாலை ஏற்பதற்கு முன்பு, முதல்வரின் சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு விதித்த தடையை நீக்கி,  உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு வாங்குமாறு, ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

  மேலும், அமைச்சர்கள் மீது கொடுத்துள்ள ஊழல் புகார்களை விசாரிக்க அனுமதி வழங்குமாறு, தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரிடம் ஒப்படைக்குமாறும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவித்ததாக தன் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாரின் விசாரணைக்கு உத்தரவிடுமாறு, ஆளுநருக்கு கடிதம் எழுதுமாறும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

  இதையெல்லாம் செய்துவிட்டு, விவாதத்திற்கு தேதி குறித்து, இடம் சொல்லுங்கள்,  அந்த இடத்திற்கு வருகிறேன் என்று அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதற்கெல்லாம் நான் ரெடி நீங்க ரெடியா எனவும் ஸ்டாலின் கேட்டுள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: