தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது, இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளரும், போக்குவரத்துறை அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார்.
கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோதை நகர், காயத்ரி நகர், கோதுர், வேலுச்சாமிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
கோதுர் 1வது வார்டு பகுதியில், நெசவு தொழில் செய்து கொண்டிருந்த நெசவாளர்களிடம் சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் நெசவாளர்களின் தறிக்கு சென்று நெசவு செய்து வாக்கு சேகரித்தார். போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் நெசவு தறி ஓட்டிய இச்செயல், நெசவாளர்கள் மத்தியில் மட்டுமல்லாது கரூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் இடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: கார்த்திக்கேயன்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.