• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • சசிகலாவை பற்றி பேச அமைச்சர்கள் ஏன் தயங்குகின்றனர்? கடம்பூர் ராஜூ பதில்

சசிகலாவை பற்றி பேச அமைச்சர்கள் ஏன் தயங்குகின்றனர்? கடம்பூர் ராஜூ பதில்

கடம்பூர் ராஜூ - சசிகலா

கடம்பூர் ராஜூ - சசிகலா

தேவையில்லாதவர்களை பற்றி, தேவையில்லமால் பேசு வேண்டிய தேவையில்லை என்பதால் யாரூம் பேசுவதில்லை என்றார் அமைச்சர்.

  • Share this:
    சசிகலாவை பற்றி பேச அமைச்சர்கள் என் தயங்குகின்றனர் என்ற கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்துள்ளார்.

    கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், மு.க.ஸ்டாலினுக்கு வெற்றுமையாக தான் தெரியும். மு.க.ஸ்டாலின் வெற்றிடத்தினை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறார்.அதிமுக வெற்றியை நோக்கி சொன்று கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பலர் கூறினர் அதனை வெற்றியிடமாக முதல்வர் மாற்றியுள்ளார். முதல்வர் இயல்பாக தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். மு.க.ஸ்டாலின் கார்பரேட் கம்பெனியினால் இயக்கப்படுகிறார்.

    மு.க.ஸ்டாலின் இயந்திரமாக செயல்படுவதாக திமுக தொண்டர் கடிதம் எழுதும் நிலை உள்ளது. இந்தியை எதிர்த்து போராட்டம் நடத்தியவது அண்ணா தலைமையில் இருந்த திமுக தான். தற்பொதுள்ள திமுக கிடையாது. இந்தி போராட்டத்தின் போது ரெயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து நாடகம் நடத்தியவர் கருணாநிதி. கேந்திரிய வித்யலாயா பள்ளியில் தங்களுக்கு கிடைக்கும் இடங்களை திமுக எம்.பிக்கள் விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை.

    தமிழ் போனாலும் , அழிந்தாலும் பரவில்லை தங்களுக்கு வருமானம் வேண்டும் என்று நினைப்பவர்கள் ஊழலை பற்றியும், தமிழை பற்றி பேசுகின்றனர். தயாநிதிமாறன் மத்திய அமைச்சராக இருந்து ஹிந்தியில் பேசியதை பாராட்டியவர் கருணாநிதி. இரட்டைவேடம் போடுவதில் திமுகவிற்கு கைவந்த கலை என்றார்.

    சசிகலா பற்றி பேச அமைச்சர்கள் ஏன் தயங்குகின்றனர் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவிற்கும் அவங்களுக்கும் (சசிகலாவிற்கும்) சம்பந்தம் இல்லை, அவங்க ஒரு கட்சி ஆரம்பித்து விட்டனர். அதிமுக யாரூக்கும் அஞ்சாது, பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. தேவையில்லாதவர்களை பற்றி, தேவையில்லமால் பேசு வேண்டிய தேவையில்லை என்பதால் யாரூம் பேசுவதில்லை.

    அதிமுகவை மீட்கவே அமமுக தொடங்கப்பட்டுள்ளது என்று டிடிவி தினகரன் கூறுவது பற்றி கேட்டதற்கு, ஒரு கட்சியை தொடங்குவதற்கு காரணம் சொல்ல வேண்டும், அதை தான் டிடிவி தினகரன் சொல்கிறார். கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தற்கு ஒரு காரணம் சொல்கிறார். இப்படி ஒவ்வொருவரும் கட்சி ஆரம்பித்தற்கு ஏதவாது காரணத்தினை கண்டிடுப்பிடிப்பார்கள் அப்படி ஒரு காரணத்தினை டி.டிவி கண்டுபிடித்துள்ளார். எந்த காலமும் எதையும் யார் கைப்பற்ற போவதில்லை என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: