நாடளுமன்ற தேர்தலை வைத்து சட்டமன்ற தேர்தலை எடைபோட முடியாது - கூட்டணி குறித்து அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்

வரலாற்றில் எப்போதும் அதிமுக தலைமையிலான கூட்டணிதான்,  தேர்தல் நெருங்கும் நேரத்தில் யார் யார் கூட்டணியில் இடம்பெருவார்கள் என அறிவிக்கப்படும் என்றார்.

நாடளுமன்ற தேர்தலை வைத்து சட்டமன்ற தேர்தலை எடைபோட முடியாது - கூட்டணி குறித்து அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்
அமைச்சர் ஜெயக்குமார்
  • Share this:
நாடளுமன்ற தேர்தலை வைத்து சட்டமன்ற தேர்தலை எடைபோட முடியாது, தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காய்ச்சல் வார்டுகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தி, அரசின் நடவடிக்கையால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டுவரும் வரை மக்களின் ஒத்துழைப்பு அரசுக்கு தேவை என்றார்.


தொடர்ந்து பேசிய அமைச்சர், நாடாளுமன்ற தேர்தலை வைத்து சட்டமன்ற தேர்தலை எடைபோட முடியாது எனவும் வரலாற்றில் எப்போதும் அதிமுக தலைமையிலான கூட்டணிதான்,  தேர்தல் நெருங்கும் நேரத்தில் யார் யார் கூட்டணியில் இடம்பெருவார்கள் என அறிவிக்கப்படும் என்றார்.

மாநிலங்களுக்கு நிதி தன்னாட்சி தேவை என குறிபிட்ட அமைச்சர், மக்கள் பணிகளுக்கா 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்யப்படுகிறது. வரி என்ற பெயரில் வருவாய் முழுவதும் மத்திய அரசுக்கு செலுத்திவிட்டு தற்போது கேட்டுக்கொண்டிருக்கும் நிலை உள்ளது.



ஜி.எஸ்.டி தொகை 12 ஆயிரம் கோடி கேட்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிபிட்டார். இதன் காரணமாகத்தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இதை எதிர்த்தாகவும், மாநிலங்களுக்கு நிதி தன்னாட்சி முக்கியம் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிபிட்டார்
First published: August 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading