'பூம் பூம்' மாட்டிடம் ஆசிபெற்ற அமைச்சர் ஜெயக்குமார் - வீடியோ

பல ஆண்டுகளுக்குப் பிறகு பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

'பூம் பூம்' மாட்டிடம் ஆசிபெற்ற அமைச்சர் ஜெயக்குமார் - வீடியோ
அமைச்சர் ஜெயக்குமார்
  • Share this:
கீழடி நாகரீகம் குறித்து பெருமைப்பட்டுக் கொள்ளும் அதே வேளையில், பூம் பூம் மாட்டுக்காரர்களையும் நாம் மறந்து விடக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக வாட்ஸ் அப் மூலம் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நமது பண்பாட்டுக் கூறுகளை, பாரம்பரிய அம்சங்களை கேலியாக பார்க்கும் மனோபாவம் நிறைய பேரிடம் இருப்பதாக ஆதங்கப்பட்டிருக்கிறார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததாகக் கூறியுள்ள அமைச்சர், மாட்டின் தலையசைப்பும், பூம் பூம் மாட்டுக்காரரின் பேச்சும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.


தோண்டி எடுத்து கீழடி நாகரீகம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் அதேவேளையில், இத்தகைய பூம் பூம் மாட்டுக்காரன் போன்றவர்களை நாம் மறந்து விடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.பூம் பூம் மாட்டுக்காரர்களை காப்பதும் ஒன்றுதான், நமது நாகரீகத்தை காப்பதும் ஒன்றுதான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பூம் பூம் மாட்டிடம் ஆசி வாங்கும் வீடியோ ஒன்றையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

Also Watch

First published: October 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading