ஓபிஎஸ் இறுதி வரை எங்களோடு தான் இருப்பார்... ஈ, கொசுவுக்கெல்லாம் அதிமுக பயப்படாது - அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

  • Share this:
    அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இறுதிவரை எங்களோடு தான் இருப்பார். எங்களுக்குள் கருத்து மாறுபாடு வர 100 சதவீதம் வாய்ப்பில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், டிடிவி தினகரன் பதற்றத்தில் இருக்கிறார். சசிகலா சிறையில் இருந்தபோது டிடிவி அவரது சொத்துக்களை கொள்ளை அடித்து விட்டதாார். அவர் தற்போது வெளியே வந்துள்ளதால் கணக்கு கேட்பார் என்ற பதற்றத்தில் டிடிவி தினகரன் உள்ளார். சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்கள் அதிமுகவில் இடமில்லை

    . சசிகலாவுக்கு எதிராக மற்ற அமைச்சர்கள் வாய் திறக்க மறுக்கிறார்களே என்ற கேள்விக்கு, அதிமுக ராணுவக் கட்டுப்பாடு உள்ள ஒரு கட்சி அதில் எல்லோருக்கும் ஒரே நிலைப்பாடு தான். பேசாதவர்கள் எல்லாம் வேறு நிலைப்பாட்டில் உள்ளதாக எடுத்துக்கொள்ள கூடாது. என்னுடைய கருத்து தான் கட்சியின் கருத்து, கட்சியில் உள்ள அமைச்சர்களின் கருத்து மாவட்டச் செயலாளர்களின் கருத்து என்று ஜெயக்குமார் தீர்மானமாக பேசினார்.

    நேற்றைய தினம் அமைச்சர் சிவி சண்முகம் உன் ஜெயக்குமாரும் மாற்றி மாற்றி நீங்கள் பேசுங்கள் என்று சொல்லிக் கொண்டது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. சமூக வலைதளங்கள் ட்ரெண்டிங்க்காக எதையாவது எழுதுவார்கள். சட்டம் தொடர்பான பிரச்சினையை சட்ட அமைச்சர் தான் பேசவேண்டும். அதனால்தான் அவரை பேச சொன்னேன் என்று விளக்கினார். சசிகலா தேவையில்லை என்ற என்னுடைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை. ஈ., கொசுவுக்கெல்லாம் அதிமுக என்ற மிகப்பெரிய இயக்கம் பயப்படாது  என்றும் தெரிவித்தார்.
    Published by:Vijay R
    First published: