• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • "உங்கள் பிள்ளைகள் கூட உங்களை மதிக்காது" : அதிமுக நிர்வாகிகளை எச்சரித்த அமைச்சர் செல்லூர் ராஜூ

"உங்கள் பிள்ளைகள் கூட உங்களை மதிக்காது" : அதிமுக நிர்வாகிகளை எச்சரித்த அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ

சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றினால் மட்டுமே, அடுத்த இரண்டு மாதங்களில் வரவுள்ள உள்ளாட்சி தேர்தலில் சீட் அளிக்கப்படும் என மதுரையில் நிர்வாகிகள் மத்தியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.

  • Share this:
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அதிமுக தேர்தல் பணிகள் தொடர்பாக அமைச்சர் செல்லூர்  ராஜூ தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,"எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் இருந்த நிலை தற்போது இல்லை. அவர்கள் இருந்த போது மக்கள் நம்பி வாக்களித்தனர்.ஆனால், அந்தநிலை தற்போது இல்லை , நாம் கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியவுடன் 2 மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதை மனதில் வைத்து அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்" என்றார்.

மேலும் பேசியவர்,"நான் என் தொகுதியை மட்டும் கருத்தில் கொண்டு பணியாற்றவில்லை, நான்கு தொகுதிகளுக்கும் சிறப்பான திட்டங்களை செய்து உள்ளேன்.நீங்கள் எல்லோரும் கடுமையாக உழைக்க வேண்டும்.நமது கட்சிக்கு யாரும் துரோகம் செய்ய கூடாது. அப்படி செய்தால் நீங்கள் துரோகி ஆகிவிடுர்கள். உங்கள் பிள்ளைகள் கூட உங்களை மதிக்காது என எச்சரித்தார்.

தொடர்ந்து பேசியவர், "நிர்வாகிகள் ஆமை வேகத்தில் பணி செய்வது வருத்தமாக உள்ளது. மதுரைக்கு எந்த திட்டமும் செய்யாத திமுக அடுத்த ஆட்சி நாங்க தான் என கூறுகின்றனர்.

மதுரைக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நாம் செய்துள்ளோம்.ப்எனவே, நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு செய்ய வேண்டும்.

சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றாமல் இருந்தால், உள்ளாட்சி தேர்தலில் அவர்களுக்கு நான் எந்த உதவியும் செய்ய முடியாது.உள்ளாட்சி தேர்தலில் சீட் கேட்பவர்களுக்கு, அவர்களுடைய பூத் பகுதியில் பெற்ற வாக்குகளை வைத்தே சீட் கொடுப்போம்.நான் தலைமையிடம் உண்மையை கூறிவிடுவேன்" என்றவர்,"யாரையாவது பிடித்து வந்துவிடலாம் என கட்சி நிர்வாகிகள் நினைக்க கூடாது.உழைக்காமல் ஆசைப் படுவது தவறு. போஸ்டர் மட்டும் ஒட்டினால் கட்சியில் பதவி கிடைக்காது கட்சியை யாரும் ஏமாற்ற முடியாது.மதுரையில் அதிமுக வேஷ்டியுடன் நாம் நடமாட வேண்டும் என்றால் அதிமுக வெற்றி பெற்றாக வேண்டும்" என பேசினார்.

சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றினால் மட்டுமே, அடுத்த இரண்டு மாதங்களில் வரவுள்ள உள்ளாட்சி தேர்தலில் சீட் அளிக்கப்படும் என மதுரையில் நிர்வாகிகள் மத்தியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: