கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளரானார் ‘மெட்ரோ மனிதர்’ ஸ்ரீதரன்!

கேரளாவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பரளிவட்டோம் பாலத்தினை ஆய்வு செய்ய வந்த ஸ்ரீதரன் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சீருடையில் என்னை பார்ப்பது இன்றே கடைசியாக இருக்கும் என தெரிவித்தார்.

கேரளாவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பரளிவட்டோம் பாலத்தினை ஆய்வு செய்ய வந்த ஸ்ரீதரன் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சீருடையில் என்னை பார்ப்பது இன்றே கடைசியாக இருக்கும் என தெரிவித்தார்.

  • Share this:
இந்திய மெட்ரோ ரயில் திட்டங்களின் செயலாக்கத்தில் பெரும் பங்காற்றியதால் ‘மெட்ரோ மேன்’ என செல்லமாக அழைக்கப்படும் ஸ்ரீதரன் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நிலையில் அவரை சட்டமன்ற தேர்தலில் கேரள முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது கேரள பாஜக.

இந்தியாவின் ‘மெட்ரோ மனிதர்’ என அழைக்கப்படும் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீதரன் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ள இருப்பதாக கடந்த பிப்ரவரி 18ம் தேதியன்று அறிவித்துள்ளார். இதனிடையே மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சங்கரம் குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக பாஜவில் இணைந்தார். எதிர்வரும் கேரள சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீதரன் களமிறக்கப்படுவார் என கூறப்பட்ட நிலையில் அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தி கேரள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது.

பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் அதிகாரப்பூர்வமாக இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

கேரளாவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பரளிவட்டோம் பாலத்தினை ஆய்வு செய்ய வந்த ஸ்ரீதரன் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சீருடையில் என்னை பார்ப்பது இன்றே கடைசியாக இருக்கும் என தெரிவித்தார். DMRC நிறுவனத்தின் ஆலோசகராக இருந்து வரும் அவர் விரையில் தன் பணியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வேன் என தெரிவித்தார்.

பரளிவட்டோம் பாலத்தின் இறுதிக்கட்ட ஆய்வுகளை முடித்துவிட்டு செய்தியாளர்களிடையே பேசிய ஸ்ரீதரன் இனி திட்டங்களை எம்.எல்.ஏவாகவோ அல்லது வேறு ஒரு பதவியிலோ தான் பார்வையிடுவேன் என தெரிவித்தார்.

இன்றே இந்த சீருடையில் இறுதியாக அணிய உள்ளேன். வெளியிடங்களுக்கு செல்லும் போது அணியும் DMRC நிறுவனத்தின் இச்சீருடையை முதல் முதலாக டெல்லியில் 1997 நவம்பரில் அணிந்தேன், 24 ஆண்டுகளாக இதனை அணிந்து வருகிறேன் என்று தெரிவித்தார்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பரளிவட்டோம் பாலமானது கேரளாவின் பொதுப்பணித்துறை சம்பந்தப்பட்ட பிரபலமான ஒரு ஊழல் ஆகும். காங்கிரஸின் உம்மன் சாண்டி முதல்வராக இருந்த போது கட்டப்பட்ட இந்த பாலம் கட்டி முடிந்து திறக்கப்பட்ட பின்னர் தரமற்றது என அம்பலமானது. 2019ல் இதனை இடித்துவிட்டு புதிய காலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ‘மெட்ரோ மனிதர்’:

இந்திய ரயில்வே துறையில் பல தசாப்தங்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஸ்ரீதரன் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள திரிதலா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். கோழிக்கோடு அரசு பாலிடெக்னிக்கில் விரிவுரையாளராக பணியை தொடங்கிய ஸ்ரீதரன், பின்னர் 1954ம் ஆண்டில் இந்திய ரயில்வே துறையில் பொறியாளராக பணியில் சேர்ந்தார்.

1963ல் ஏற்பட்ட புயலில் சேதமடைந்த பாம்பன் பாலத்தை புணரமைக்க நிர்ணயிக்கப்பட்டிருந்த 6 மாத காலகட்டத்திற்குள் பணிகளை நிறைவு செய்து, மூன்றே மாதங்களில் அதனை முடித்து மக்களின் மனதில் இடம்பிடித்தவர்.. இந்திய ரயில்வேயின் அடையாளமாக விளங்கும் கொங்கன் ரயில்வே பாதையை தலைமையேற்று நிர்மானித்தவர்.

இந்தியாவின் முதல் மெட்ரோ என்ற பெருமை கொண்ட கொல்கத்தா மெட்ரோவை உருவாக்கியவர், டெல்லி மெட்ரோ இவரின் தலைமையில் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாக இயக்குனராக 1997 முதல் இருந்து பின்னர் 16 ஆண்டுகாலம் பணிபுரிந்து 2011ல் பணி ஓய்வு பெற்றார்.

லக்னோ, கொச்சி, ஜெய்ப்பூர், விசாகபட்டிணம், விஜயவாடா, கோவை மெட்ரோ நிறுவனங்களுக்கு ஆலோசகராக உள்ளார். இவரின் தலைமையில் லக்னோ மெட்ரோ 2 ஆண்டுகள் 9 மாதங்களில் நிறைவடைய உள்ளது, இதுவே மிக குறுகிய காலத்தில் முடிக்கப்பட்ட மெட்ரோவாக இந்திய அளவிலும் உலக அளவிலும் இருக்கப் போகிறது,

பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன், செவாலியே உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அளிக்கப்பட்டு ஸ்ரீதரன் கவுரவப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: