முகப்பு /செய்தி /அரசியல் / திண்டுக்கல்லில் மருத்துவக் கல்லூரி; மத்திய அரசுக்கு மக்கள் சார்பாக நன்றி - திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் மருத்துவக் கல்லூரி; மத்திய அரசுக்கு மக்கள் சார்பாக நன்றி - திண்டுக்கல் சீனிவாசன்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

நடக்கின்ற செய்திகளை மக்கள் பார்த்து வெற்றி கொடுத்துள்ளனர். இந்த வெற்றி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் புதிதாக ஆறு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் நேற்று ஒப்புதல் அளித்தது. அதன்படி, திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக இன்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விரைவில் திண்டுக்கல்லில் மருத்துவ கல்லூரி கட்டும் பணி நடைபெறும் என கூறியுள்ளார்.

திண்டுக்கலில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர் “திண்டுக்கல்லில் விரைவில் மருத்துவ கல்லூரி கட்டும் பணி நடைபெற உள்ளது. மருத்துவ கல்லூரி அமைக்க உத்தரவிட்ட மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் திண்டுக்கல் மாவட்ட மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்த அவர் "தமிழகத்தில் நடைபெற்ற 2 தொகுதிக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது என்பது நாங்கள் எதிர்பார்த்தது தான். பொய்யான வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் சொல்லி பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றார் .

ஆனால் நடக்கின்ற செய்திகளை மக்கள் பார்த்து வெற்றி கொடுத்துள்ளனர். இந்த வெற்றி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் வருகின்ற டிசம்பர் 30-க்குள் உள்ளாட்சி தேர்தல் கண்டிப்பாக நடைபெறும் தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி அமையும்” என தெரிவித்தார்.

பார்க்க :

First published:

Tags: Dindigal Sreenivasan