ஹோம் /நியூஸ் /அரசியல் /

திமுகவுடன் இணைந்து முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கப் போகும் மதிமுக

திமுகவுடன் இணைந்து முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கப் போகும் மதிமுக

இந்த தேர்தலில் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை விட்டு தர தாயாராக இல்லை என கூறப்படுகிறது.

இந்த தேர்தலில் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை விட்டு தர தாயாராக இல்லை என கூறப்படுகிறது.

இந்த தேர்தலில் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை விட்டு தர தாயாராக இல்லை என கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :

கடந்த காலங்களில் சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டபடமால் திமுக கூட்டணியை விட்டு வெளியேறிய மதிமுக, 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் சுமுகமாக தொகுதி உடன்பாடு செய்து , திமுக கூட்டணியில் தொடருமா?

கடந்த கால மதிமுகவின் தேர்தல் வரலாற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1993ம் ஆண்டு திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட பின், 1994ம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கினார் வைகோ. திமுகவில் இருந்து பல மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடளுமன்ற உறுப்பினர்களுடன் பிரிந்து மதிமுகவை தொடங்கிய வைகோ முதன் முதலாக 1996 சட்டமன்ற தேர்தல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். ஜனதாதளம் , இந்திய கம்யூன்ஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார் வைகோ. அப்போது ஜெயலலிதா மீது இருத்த ஊழல் குற்றசாட்டு மக்களுக்கு இருந்த அதிருப்தி, திமுகவுடன், மூப்பானர் தலைமையிலான தமாகா உள்ளிட்ட கட்சிகளின் வலுவனா கூட்டணி, நடிகர் ரஜினியின் ஆதரவு நிலைப்பாடு உள்ளிட்டவையால் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை அந்த தேர்தலில் சந்தித்தது. திமுகவில் இருந்து பிரிந்துவந்த வைகோ, தான் சந்தித்த முதல் தேர்தலில் தோல்வியடைந்தார். தான் போட்டியிட்ட விளாத்திகுளம், சிவகாசி என இரண்டு தொகுதியிலும் வைகோ தோல்வியை சந்தித்தார்.

பின்னர் 1998ம் ஆண்டு நடந்த நாடளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த மதிமுக மூன்று நாடளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு நடைபெற்ற நாடளுமன்ற தேர்தலில் எந்த கட்சியில் இருந்து வெளியேற்றபட்டு, புதிய கட்சியை வைகோ தொடங்கினாரோ அதே திமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து நான்கு நாடளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று, வாஜ்பாய் தலைமையிலான பாஜக அமைச்சரைவையிலும் மதிமுக இடம்பெற்றது.

பின்னர் 2001ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக உடன் தொகுதி உடன்பாடு எட்டபடாதால் , திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட மதிமுக தோல்வியடைந்தது. திமுக அந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க வைகோ திமுக கூட்டணி விட்டு வெளியேறி வாக்குகளை பிரித்ததும் முக்கிய காரணமாக அரசியல் விமர்சகர்களால் அப்போது கருதப்பட்டது.

பின்னர் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை ஆதரித்துப் பேசியதாக வைகோ உள்ளிட்ட மதிமுகவின் முண்ணனி தலைவர்கள் பொடா சட்டத்தில் கைது செய்யபட்டு, ஓராண்டுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ஜெயலலிதா மீது கடும் கோபம்அடைந்த வைகோ , சிறையில் இருத்து வெளியில் வந்தவுடன் அதிமுக ஆட்சிக்கு எதிராக மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார்.

2004ம் ஆண்டு தேர்தலில் திமுக ஒரு வலுவலான கூட்டணியை அதிமுகவிற்கு எதிராக அமைத்தது. திமுக கூட்டணியில் இடம்பெற்ற வைகோ அதிமுகவிற்கு எதிராக மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. மதிமுக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அடுத்து 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில்தொகுதி உடன்பாடு எட்டபடாதால், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி ,யார் தன்னை சிறையில் அடைத்தரோ, அதே ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தார் வைகோ. அதிமுக கூட்டணியில் 35 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக 6 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக மதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு சென்றனர்.

பின்னர் ஈழத்தமிழர் பிரச்சனை காரணமாக மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இருத்து வெளியேறிய வைகோ, 2009 நாடளுமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து நாடளுமன்ற தேர்தலை சந்தித்து, 4 தொகுதிகளில் போட்டியிட்டு ஈரோடு நாடளுமன்ற தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக 2011 சட்டமன்ற தேர்தலில், தான் கேட்ட தொகுதியை தர அதிமுக மறுத்துதால் கூட்டணியை விட்டு கடைசி நேரத்தில் வெளியேறினார்.

தேர்தல் பிரச்சாரம் என்றாலே வைகோ பேச்சு முக்கியதுவம் வாய்ந்தாக இருக்கும்.ஆனால் 2011 ம் ஆண்டு கடைசி நேரத்தில் கூட்டணி விட்டு வெளியேறிதால், தேர்தலை வைகோ புறக்கணித்துவிட்டார். தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஆதராவாக பிரச்சாரம் செய்ய முடியதா நிலையில் இருந்த வைகோ, மதிமுக ஏன் தேர்தலை புறக்கணித்து என்று மக்களுக்கு விளக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தினார்.

2014ம் ஆண்டு நாடு முழுவதும் மோடி அலை வீசிய போது , 2014 நாடளுமன்ற தேர்தலில் மதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றது. வைகோ 15 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலில் போட்டியிட்டார். விருதுநகர் நாடளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வைகோ உள்ளிட்ட 7 மதிமுக வேட்பாளர்களும் தோல்வியை சந்தித்தனர். பின்னர் 2016ம் நடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற கூட்டணியை கடும் முயற்சி செய்து வைகோ உருவாக்கினரார்.

இந்த கூட்டணியில் தேமுதிக, ஜி.கே.வாசன் தலைமையிலான தமாகா உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்றன. அதிமுக, திமுகவிற்கு மாற்றாக மூன்றுவது அணி என்று மக்கள் நலக் கூட்டணி அமைந்தாலும், வாக்குகளை பிரித்து திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்க வைகோ எடுத்த முயற்சி தான் இந்த மக்கள் நலக் கூட்டணி உருவாக காரணம் என அப்போது அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்பட்டது. மக்கள் நலக் கூட்டணி ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டாலும், திமுக ஆட்சியை கைப்பற்ற முடியமால் போனதற்கு மக்கள்நலக் கூட்டணி பிரித்த வாக்குகள்தான் முக்கிய காரணம் என தேர்தல் முடிவு புள்ளி விபரங்களில் தெரிய வந்தது.

2019 நாடளுமன்ற தேர்தலில் மதிமுக உட்பட மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற இரண்டு கம்யூ கட்சிகள, விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இடம் பெற்று தேர்தலை சந்தித்தனர். ஒரு தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வெற்றி பெற்றது. தேர்தல் உடன்படிக்கையின் படி வைகோ திமுக கூட்டணி சார்பாக மாநிலங்களவை உறுப்பினாராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து திமுக கூட்டணியில் இடம்பெற்ற தேர்தலை சந்திக்க உள்ள மதிமுக அந்த கூட்டணியில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை எதிர்பார்த்துள்ளது. அதில் திருப்போரூர், சங்கரன்கோயில், வாசுதேவநல்லூர், கிணத்துகடவு, சிவகங்கை, விருதுநகர், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஆலங்குடி, துறைமுகம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட இரட்டை இலக்க தொகுதி பட்டியலுடன் திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையை வைகோ தொடங்க உள்ளார். ஆனால் இந்த தேர்தலில் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை விட்டு தர தாயாராக இல்லை என கூறப்படுகிறது.

அதேபோல் கடந்த நாடளுமன்ற தேர்தலில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இந்த சட்டமன்ற தேர்தலிலும் மதிமுக வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கும் திட்டத்தில் திமுக தலைமை உள்ளதாக கூறப்படுகிறது. இது போன்ற பல சிக்கல்களுக்கு இடையில் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தல் காலங்களைப்போல் இல்லமால், இந்த முறை வைகோ, கூட்டணி தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை சுமூமாக முடித்து , திமுக கூட்டணியில் தொடந்து இடம்பெற்று முதல் முறையாக திமுக உடன் இணைந்து மதிமுக சட்டமன்ற தேர்தலை சந்திக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Published by:Suresh V
First published:

Tags: DMK Alliance, MDMK, Mdmk leader vaiko, TN Assembly Election 2021