முகப்பு /செய்தி /அரசியல் / மணிப்பூரில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் பாஜக அரசு வெற்றி

மணிப்பூரில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் பாஜக அரசு வெற்றி

மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங்

மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங்

மணிப்பூர் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தில் ஆளும் பாஜக அரசு வெற்றிபெற்றது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

பைரன் சிங் தலைமையில் பாஜக ஆட்சிசெய்யும் மணிப்பூரில், போதைப் பொருள் கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றுமாறு காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளை அரசு நிராகரித்தது. இதையடுத்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டுவந்த நிலையில், சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், நம்பிக்கை தீர்மானத்தை முதலமைச்சர் பைரன் சிங் கொண்டுவந்தார். நாள் முழுவதும் நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம், அரசு வெற்றிபெற்றது.

60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 53 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், பாஜக கூட்டணிக்கு 28 பேரும், காங்கிரஸுக்கு 24 பேரும் உள்ளனர். வாக்கெடுப்பில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் 8 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

First published:

Tags: Manipur