பைக்கில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த அ.ம.மு.க வேட்பாளர்

பைக்கில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த அ.ம.மு.க வேட்பாளர்

அமமுக வேட்பாளர் மாரியப்பன் கென்னடி

அதிமுக, திமுக, வேட்பாளர்கள் பண பலத்தை நம்பி தேர்தலில் நிற்கிறார்கள் நான் மக்கள் பலத்தை நம்பி தேர்தலில் நிற்கிறேன் என அமமுக வேட்பாளர் மாரியப்பன் கென்னடி தெரிவித்துள்ளார்.

  • Share this:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் அ.ம.மு.க சார்பில் எஸ்.மாரியப்பன் கென்னடி போட்டியிடுகிறார். இவர் அ.ம.மு.க, தே.மு.தி.க நிர்வாகிகளுடன் பைக்கில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன் கென்னடி, “ களத்திலுள்ள வேட்பாளர்களில் நல்ல வேட்பாளராக எந்த ஒரு வழக்கும் இல்லாத வேட்பாளராக நான் இருக்கிறேன்.தி.மு.க வேட்பாளரும் அ.தி.மு.க வேட்பாளரும் இந்த தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்று குறை இருக்கிறது. தி.மு.க வேட்பாளர் 2011 சட்டமன்றத் தேர்தலில் நின்று தோல்வியை தழுவினார்.அதன்பின்னர் இந்த தொகுதி பக்கமே தலை காட்டவில்லை அதேபோல் அ.தி.மு.க வேட்பாளர் இரண்டு ஆண்டு காலமாக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி அவருடைய சுய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்துக்கொண்டார். தொகுதி மக்களுக்கு எதும் செய்யவில்லை.

ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியுமாக இருக்கக்கூடிய அ.தி.மு.க, தி.மு.க வேட்பாளர்கள் பணபலத்தை நம்பியே நிற்கிறார்கள். நாங்கள் மக்கள் பலத்தை நம்பி நிற்கின்றோம் ஆகவே அமுமுக கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும்‌” என்றார்.

செய்தியாளர்: சிதம்பரநாதன்
Published by:Ramprasath H
First published: