மமதா பானர்ஜி மீண்டும் பாஜகவுடன் இணைவார் - சீதாராம் யெச்சூரி

மமதா பானர்ஜி மீண்டும் பாஜகவுடன் இணைவார் - சீதாராம் யெச்சூரி

சீதாராம் யெச்சூரி

கொல்கத்தாவின் பிரிகேட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேற்குவங்க சட்டமன்ற தேர்தலுக்கான புதிய கூட்டணிக்கு அச்சாரம் கிடைத்துள்ளது. மமதா பானர்ஜி மற்றும் பாஜகவை எதிர்த்து இடது சாரிகளும், காங்கிரஸ் கட்சியும் கைகோர்த்துள்ளன.

  • Share this:
தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் அமைந்தால் மமதா பானர்ஜி ஆட்சி அமைப்பதற்காக பாஜகவுடன் மீண்டும் இணைவார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

கொல்கத்தாவின் பிரிகேட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேற்குவங்க சட்டமன்ற தேர்தலுக்கான புதிய கூட்டணிக்கு அச்சாரம் கிடைத்துள்ளது. மமதா பானர்ஜி மற்றும் பாஜகவை எதிர்த்து இடது சாரிகளும், காங்கிரஸ் கட்சியும் கைகோர்த்துள்ளன. மேலும் மேற்குவங்கத்தில் செல்வாக்கு பெற்ற இஸ்லாமிய மதகுரு அப்பாஸ் சித்திக் தொடங்கியிருக்கும் இந்திய மதச்சார்பற்ற முன்னணியும் இடதுசாரிகள் கூட்டணியில் இணைந்துள்ளது. மதச்சார்பற்ற கூட்டணியாக கருதப்படும் இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணியில் இஸ்லாமிய மதகுருவின் கட்சி இணைந்துள்ளது காங்கிரஸுக்கே சங்கடமாக மாறியிருக்கிறது.

இதனிடையே இக்கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மேற்குவங்கத்தில் ஒரு வேளை தொங்கு சட்டமன்றம் அமைந்தால் ஆட்சி அதிகாரத்திற்காக மமதா பானர்ஜி மீண்டும் பாஜக தலைமையிலானதேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவார் என தெரிவித்தார்.

பாஜகவுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நடைபெற்று வரும் அரசியல் மோதல் என்பது ஒரு "போலி சண்டை" என தெரிவித்தார்.

Mamata Banerjee
மம்தா பானர்ஜி


பலரும் என்னிடம் மேற்குங்கத்தில் தொங்கு சட்டமன்றம் அமைந்தால் என்ன நடக்கும் என்று கேட்கிறார்கள், நீங்கள் இதை திரிணாமுல் காங்கிரஸிடம் தான் கேட்க வேண்டும், தற்போது அவர்கள் தான் இது குறித்து பதிலளிக்க சிறந்த நிலையில் உள்ளனர். 1998ம் ஆண்டு முதலே பல ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணியில் மமதா பானர்ஜி அங்கம் வகித்தார், வரும் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் அமைந்தால் மமதா பானர்ஜி ஆட்சி அமைப்பதற்காக பாஜகவுடன் மீண்டும் இணைவார் என்று தெரிவித்தார்.

இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் மாபெரும் கூட்டணி, ஊழலில் திளைத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவை மாநிலத்தில் தோல்வி அடைய செய்யும் என சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். மோடி விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதை போன்றே மமதா மாநில இளைஞர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

கொரோனா பெயரினால் தொடங்கப்பட்ட PM CARES Fund நிதியைக் கொண்டு தேர்தலில் தலைவர்களை விலைக்கு வாங்கி வருகின்றனர் எனவும் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டினார்.
Published by:Arun
First published: