Home » News » Politics » MAMATA BANERJEE HAS TRUMP LIKE ATTITUDE IF A DICTATOR LIKE HER LOSES SHE WILL NOT LEAVE MUT

டிரம்ப் போல்தான் மம்தாவும், தோற்றாலும் நாற்காலியை விட்டு நகர மாட்டார்: பாஜக எம்.பி. திலிப் கோஷ்

மம்தா போன்ற சர்வாதிகாரி தோற்றாலும் நகர மாட்டார், டிரம்ப் போல்தான்.

டிரம்ப் போல்தான் மம்தாவும், தோற்றாலும் நாற்காலியை விட்டு நகர மாட்டார்: பாஜக எம்.பி. திலிப் கோஷ்
மம்தா பானர்ஜி. | கோப்புப் படம்
  • Share this:
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டிரம்ப் போன்று எதேச்சதிகார புத்தி கொண்டவர், தோற்றாலும் பதவி நாற்காலியை விட்டு நகர மாட்டார் என்று பாஜக எம்.பி திலிப் கோஷ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் நெருங்கிய நட்பு இருக்கும் போது டிரம்பை எதேச்சதிகாரி, நகர மாட்டார் என்று பாஜக எம்.பி. ஒருவரே கூறியிருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாக பாஜக வட்டாரங்களே இதனை விசித்திரமாகப் பார்க்கின்றன.

மம்தாவின் எதேச்சதிகார மனநிலை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாத மனநிலை என்று திலிப் கோஷ் சாடியுள்ளார்.


“மம்தா கட்சிக்கே ஜனநாயகம் இல்லை. அதிலிருந்து வெளியேறி வருகின்றனர். மாநிலத்தில் ஜனநாயகமும் இல்லை, சட்டம் ஒழுங்கும் இல்லை.

இன்றைய தேதியில் டிரம்ப்பை பார்க்கிறோம் அவர் எப்படி நடந்து கொள்கிறார், அதையே நாம் மம்தாவிடம் பார்க்க முடியும். மம்தா போன்ற சர்வாதிகாரி தோற்றாலும் நகர மாட்டார், டிரம்ப் போல்தான்.

அவரது நடத்தை அப்படித்தான் மக்களை யோசிக்க வைக்கிறது. கோவிட் 19 தடுப்பூசிக்கு மம்தாஸ்ரீ என்று பெயர் வைப்பார் போல்தான் தெரிகிறது.” என்று மத்திய அரசின் திட்டங்களை தன் பெயரில் மாற்றி மக்களிடம் கொண்டு செல்வதாக மம்தா மீது கடும் குற்றச்சாட்டு எழுப்பினார்.
First published: January 12, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading