• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • ம.நீ.ம தொகுதி பங்கீடுகள் இன்று முடிவு?

ம.நீ.ம தொகுதி பங்கீடுகள் இன்று முடிவு?

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், கட்சிகள் இடையேயான கூட்டணி, தொகுதி பங்கீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

  • Share this:
    தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், கட்சிகள் இடையேயான கூட்டணி, தொகுதி பங்கீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தொகுதி ஒதுக்கீடுகள் தொடர்பான முடிவுகள் இன்று எடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்று இன்று மதியம் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூடி முடிவு செய்கிறது. மக்கள் நீதி மையத்துடன் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சியும் ரவி பச்சமுத்து தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே ஆம்ஆத்மி கட்சி மக்கள் நீதி மையத்தில் கூட்டணி அமைத்துள்ளது.

    இந்த நிலையில் இன்று மதியம் மக்கள் நீதி மையத்தின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுவிற்கு கமல்ஹாசன் அவசர அழைப்பு விடுத்திருக்கிறார். அடுத்த 3 நாட்களுக்கு சென்னையிலேயே தங்கியிருக்குமாறும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாகவும் மக்கள் நீதி மையத்தில் செயற்குழு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    மூன்றாம் தேதி முதல் கமல்ஹாசன் பிரச்சாரத்தை துவங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக கூட்டணி தொகுதி பங்கீடுகள் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ram Sankar
    First published: