நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், குடியுரிமை சட்டத்திற்கான அவசியம் என்ன என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகள் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பது அரசின் சூழ்ச்சி என விமர்சித்தார்.
விலைவாசி விண்ணைமுட்டும் வகையில் ஏறி வரும் நிலையில் குடியுரிமை சட்டத்திற்கான அவசரம் என்ன என்கிற கேள்விதான் நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கக் காரணம் என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தானின் இந்துக்களுக்கு வழங்கப்படும் உரிமை இலங்கையின் இந்துக்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை என்று வினவினார்.
மாணவர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும், இந்திய ஜனநாயகத்தின் மீது விழும் அடி என்றும் புதிய இந்தியா பிறந்துவிடும் என ஆசைவார்த்தை கூறி சட்டத்திருத்தங்களை தனக்கு சாதகமாக மாற்றியவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்பதற்கான பதில் வரலாற்றின் இருண்ட பக்கத்தில் இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.