• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • மக்கள் நீதி மய்யம் கட்சியின் இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

154 தொகுதிகளில் மநீம போட்டியிட உள்ள நிலையில் 70 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

  • Share this:
    மக்கள் நீதி மய்யம் கட்சியின் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 24 தொகுதிகளுக்கான இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

    தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கடந்த 12-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் வேட்புமனு தாக்கல் மந்தமாக இருந்தாலும் நேற்றும் இன்றும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான் உள்ளிட்ட பலர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி அகில இந்திய சமத்துவ மக்கள் மற்றும் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. மநீம கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 இடங்களை ஒதுக்கி உள்ளது. மீதமுள்ள 154 தொகுதிகளில் மநீம போட்டியிட உள்ள நிலையில் 70 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    அதை தொடர்ந்து 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் மநீம கட்சியின் முக்கிய நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டது. 2-வது வேட்பாளர் பட்டியலில் தான் கமல் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அறிவிக்ப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து 24 வேட்பாளர்கள் கொண்ட இறுதி பட்டியலை மநீம வெளியிட்டுள்ளது. கரூர், திருவாரூர், சிவகாசி, ஆயிரம்விளக்கு உள்ளிட்ட தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: