மக்கள் நீதி மய்யத்தின் 4-ம் ஆண்டு தொடக்க விழா... முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

மக்கள் நீதி மய்யத்தின் 4-ம் ஆண்டு தொடக்க விழா... முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

கமல்ஹாசன்

கூட்டணி முடிவு மற்றும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

  • Share this:
மக்கள் நீதி மய்யத்தின் 4-ம் ஆண்டு தொடக்கவிழாவை ஒட்டி, சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை கமல்ஹாசன் இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நான்காம் ஆண்டு தொடக்க விழாவை மிகப்பெரிய மாநாடாக நடத்துவதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி திட்டமிட்டது. ஆனால், காவல் துறை அனுமதி கிடைக்காததால், தேர்தல் மாநாட்டை வருகின்ற மார்ச் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

இந்நிலையில், .மக்கள் நீதி மய்யத்தின் 4-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் உள்அரங்கத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். அப்போது? எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சி எடுக்கவுள்ள நிலைப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. அத்துடன், கூட்டணி முடிவு மற்றும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

மேலும், கூட்டத்துக்குப் பின் மாலையில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்ப்படுகிறது.
Published by:Vijay R
First published: