அதிமுக-வின் தேர்தல் அறிக்கை ரஜினி மாதிரி... துரைமுருகன் கருத்துக்கு மாஃபா பாண்டியராஜன் பதிலடி

துரைமுருகன் - மாஃபா பாண்டியராஜன்

ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய தனது ஆதரவாளர்களுடன் மேள தாளங்கள் முழங்க வாகன பேரணியாக வந்தார் மாஃபா பாண்டியராஜன்.

 • Share this:
  அதிமுக-வின் தேர்தல் அறிக்கை வில்லன் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விமர்சித்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எங்கள் தேர்தல் அறிக்கை ரஜினி மாதிரி என்று பதிலடி கொடுத்துள்ளார்.

  தமிழக சட்டமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பாக இருக்கும் சூழலில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் போட்டியிடுகிறார். இந்தநிலையில் இன்று ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய தனது ஆதரவாளர்களுடன் மேள தாளங்கள் முழங்க வாகன பேரணியாக வந்தார் மாஃபா பாண்டியராஜன்.

  பின்னர் அப்போது உடன் வந்திருந்தவர்கள் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டுமா என குழப்பம் ஏற்பட்டதால், சிறிது நேரம் காத்திருந்தார் பின்னர் மனுவை ஆராய்ந்து பின்னர் தாக்கல் செய்தார்.

  இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக தேர்தல் அறிக்கை முதலில் ரஜினி திரைத்துறையில் வில்லனாக வந்து பின்னர் ஹீரோ ஆகியது போன்றதது. முதலில் வில்லன் போன்றும் பின்னர் ஹீரோவாகவும் தெரியும் என்று கூறியவர் தற்போது திமுக தேர்தல் அறிக்கை செகண்ட் ஹீரோவாக உள்ளது என கூறினார்.

  இதற்கு முன்னதாக காட்பாடி தொகுதியில் 10-வது முறையாக வேட்பு மனுதாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொதுச்செயலளார் துரைமுருகன், திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால், அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன் என்று விமர்சித்திருந்தார்.
  Published by:Vijay R
  First published: