கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் 2000 ரூபாயாக கொடுப்பதுதான் தமிழக அரசு- பாஜக மாநில துணைதலைவர்

கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் 2000 ரூபாயாக கொடுப்பதுதான் தமிழக அரசு- பாஜக மாநில துணைதலைவர்

அண்ணாமலை

2000 ரூபாயை நம்பி 5 வருடத்தை மக்கள் அடகு வைத்து விடக்கூடாது என பாஜக மாநில துணைதலைவர் அண்ணாமலை கூறினார்.

 • Share this:
  தமிழக மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் மக்களுக்கு 2000 ரூபாயாக கொடுப்பதுதான் தமிழக அரசு எனவும் 2000 ரூபாயை நம்பி 5 வருடத்தை மக்கள் அடகு வைத்து விடக்கூடாது என பாஜக மாநில துணைதலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

  கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய வேளாண் மசோதாவின் நன்மைகள் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது மத்திய அரசு அனைத்து மாநில மக்களுக்கும் 5 லட்ச ரூபாய் காப்பீட்டு திட்டங்களை அளித்து இருப்பதாக தெரிவித்தார்.

  ஆனால் மோடி அரசு தனிநபரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி ,விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தியிருக்கிறது என தெரிவித்தஅண்ணாமலை, பாஜகவிற்கு வாக்களிக்க வில்லை எனில் தலைக்கு மேல் சீரியல் லைட் வைத்திருக்கும் தலைவர்கள், காரின் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள்தான் உங்களுக்கு அரசியல்வாதிகளாக வாய்ப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

  சீமான், கமல் போன்றவர்களை மக்கள் நம்ப கூடாது என தெரிவித்த அண்ணாமலை, காங்கிரஸ் போன்ற கட்சிகளையும் மக்கள் நம்ப கூடாது எனவும் தெரிவித்தார். வரும் 2021 சட்டமன்ற தேர்தல் மிகவும் முக்கியமானது என தெரிவித்த அவர், பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது பாசம் கொண்டவர் எனவும் தமிழகத்திற்கு அவர் வந்தால் வேட்டிதான் கட்டுவார் எனவும் தெரிவித்தார். மோடி நம் மீது காட்டும் அன்பை, நாம் அவர் மீது காட்டுவதே இல்லை எனவும் தெரிவித்தார்.

  திமுக எம்பிகள் டெல்லிக்கு விமானத்தில் சென்று நாடாளுமன்ற கேன்டீனில் சாப்பிட்டு விட்டு தூங்குகின்றனர் எனவும் , இங்கு வந்து பிரதமர் மோடி சரியில்லை என்று பேசுகின்றனர் என்று கூறிய அண்ணாமலை, திமுக எம்.பிகளுக்கு தைரியம் இருந்தால் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் எனவும் தமிழகத்தில் இருந்து கொண்டு பேசகூடாது எனவும் கூறினார்.

  தமிழக அரசு 2000 ரூபாய் கொடுக்கின்றனர் என்பதற்காக 5 வருட வாழ்க்கையை அடகு வைத்து விடாதீர்கள் என அண்ணாமலை தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மோடியை பொறுத்தவரை மக்கள் விலை மதிப்பற்றவர்கள் எனவும், பாஜக ஒட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார். பாஜகவிடம் இல்லாத பணம் இல்லை, ஆட்சியிலும் இருக்கின்றோம் என தெரிவித்த அவர், பணத்தை நேர்மையான முறையில் 6 ஆயிரம் ரூபாயாக விவசாயிகளுக்கு கொடுக்க நினைக்கின்றோம், அதே பணத்தை நேர்மையான முறையில் வீடாக, ரேசன் பொருட்களாக மக்களுக்கு பாஜக கொடுக்கும் எனவும் தெரிவித்தார். 2000 ரூபாயை நம்பி அந்த பக்கம் போய்விடாதீர்கள் என கேட்டுக்கொண்ட அவர், சட்ட சபைக்குள் பாஜக வேட்பாளரை அனுப்பவேண்டும் என்றும் குறிப்பாக சூலூரில் பாஜக வெற்றி பெற்றே ஆக வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
  Published by:Suresh V
  First published: