முகப்பு /செய்தி /அரசியல் / திமுகவின் செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது - காங்கிரஸ் தலைவர் அதிரடி அறிக்கை

திமுகவின் செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது - காங்கிரஸ் தலைவர் அதிரடி அறிக்கை

கே.எஸ் அழகிரி | ஸ்டாலின்

கே.எஸ் அழகிரி | ஸ்டாலின்

  • Last Updated :

மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவியை திமுக வழங்காதது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. நாளை ஒன்றிய தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடக்க இருக்கிறது.

இந்த நிலையில், ஒன்றிய ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய பதவியிடங்களை தராதது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்று திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Congress, DMK, Local Body Election 2019