உள்ளாட்சி தேர்தல் : திமுக மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

உள்ளாட்சி தேர்தல் : திமுக மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
உச்ச நீதிமன்றம்
  • Share this:
இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தாமல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தக் கூடாது என திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாததால் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இதேப்போன்று வார்டு வரையறை, இடஒதுக்கீடு பணிகளை முடித்த பின்னர் நகராட்சி, மாநகராட்சிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி கரூரை சேர்ந்த வாக்காளர் முருகேசன் உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.


இதேபோன்று உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட 10 க்கும் மேற்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியிருக்கும் சூழலில் இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 
First published: December 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்