தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் ஒரிரு நாட்களில் இறுதியாக வாய்ப்பு

பாஜக

இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் இந்த கூட்டத்தில் 5 மாநில வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 • Share this:
  தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நாளை மற்றும் நாளை மறுநாள் உறுதிசெய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

  தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக-வுடன் தொகுதி பங்கீடு தொடர்ந்து இழுபறியில் உள்ளது.

  இந்நிலையில் 5 மாநில பாஜக வேட்பாளர்களை இறுதி செய்ய அந்த கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் கூடுகிறது. இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் இந்த கூட்டத்தில் 5 மாநில வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இன்று நடைபெறும் கூட்டத்தில் மேற்குவங்கத்தில் நடைபெற உள்ள முதல் இரண்டு கட்டத்திற்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட உள்ளனர். நாளை நடைபெறும் கூட்டத்தில் தமிழக வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.  தமிழகத்தில் பாஜக தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படாத நிலையில் ஏற்கனவே 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உறுதி செய்யப்படும் தொகுதிகேற்ப வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
  Published by:Vijay R
  First published: