• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • ‘பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம்’- மேற்கு வங்கத்தில் தலையெடுக்கும் குடிமைச் சமூக இயக்கங்கள்

‘பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம்’- மேற்கு வங்கத்தில் தலையெடுக்கும் குடிமைச் சமூக இயக்கங்கள்

அப்பாஸ் சித்திகி.

அப்பாஸ் சித்திகி.

புதிதாக உருவான இந்திய மதச்சார்பற்ற முன்னணி (Indian Secular Front) கட்சியுடன் இடதுசாரி-காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இந்தக் கட்சியைத் தொடங்கியுள்ளவர் முஸ்லிம் மதகுரு அப்பாஸ் சித்திகி

  • Share this:
மேற்கு வங்கத் தேர்தல் பரபரப்பான கட்டங்களை எட்டியுள்ளது, ஒரு புறம் திரிணாமுல், பாஜக இருவருக்கும்தான் போட்டி என்பது போல் இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் தாக்கிப் பேசி வருகின்றனர்.

மற்றொரு புறம் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி முஸ்லிம் மதம் சார்ந்த கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதாக பாஜக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது, இதற்குக் காரணமும் உள்ளது.

புதிதாக உருவான இந்திய மதச்சார்பற்ற முன்னணி (Indian Secular Front) கட்சியுடன் இடதுசாரி-காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இந்தக் கட்சியைத் தொடங்கியுள்ளவர் முஸ்லிம் மதகுரு அப்பாஸ் சித்திகி, இவர் தன் கட்சிக்கு இந்திய மதச்சார்பற்ற கட்சி என்று பெயர் வைத்தாலும், அதற்கு அடிப்படைவாத கட்சி என்ற பெயர் ஏற்கெனவே இருந்து வருவதுதான் காங்கிரஸ், இடதுசாரி கூட்டணியின் ‘செக்யூலர்’ கோஷத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்திகியின் முந்தைய பேச்சுகள் மதம் சார்ந்தவையாக இருந்தமையால் அவர் செக்யூலர் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்தால் அதை எப்படி மக்கள் நம்புவார்கள் என்று பாஜக கேள்வி எழுப்பி வருகிறது.

சித்திகி முதலில் அசாசுதீன் ஓவைஸி கட்சியுடன் கூட்டணி மேற்கொள்ள முயற்சி செய்தார். ஆனால் காங்கிரஸ், இடது சாரி அழைக்கவே அந்தக் கூட்டணியில் சேரவிருப்பதாகத் தெரிகிறது.

சித்திகி கடந்த சில மாதங்களாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். மம்தா ஆட்சி முஸ்லிம் மக்களையும் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினரையும் ஒதுக்குவதாகவும் அவர் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார், இவருக்குச் சேரும் கூட்டமும் அனைவரையும், ஊடக கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆனால் கட்சித் தொடங்கும் போது பழங்குடியினர் மற்றும் தலித் தலைவர்களையும் இணைத்துக் கொண்டார். தெற்குபர்கனா, வடக்கு பர்கனா, ஹூக்ளி, புர்த்வான், ஹவுரா, பிர்பும் போன்ற தெற்கு வங்காள மாவட்டங்களில் இவருக்கு ஓரளவுக்குச் செல்வாக்கு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இவரை மதவாதச் சக்தியாக பாஜக பார்க்க, இடது சாரிகளோ சித்திகி பொதுவாகத்தான் பேசுகிறார், சாமானிய, ஏழை மக்களுக்குக் குரல் கொடுக்கிறார் என்று கூறுகின்றனர். மேலும் சித்திகி கட்சிக்கு எதிராக அவருக்கு இருக்கும் பெரிய மாஸை குறைக்க பாஜக-ஆர்.எஸ்.எஸ். ஊடகங்களை வைத்து விளையாடுகின்றன என்றும் இடதுசாரிகள் விமர்சிக்கின்றனர்.

இந்தக் கூட்டணி பல விவாதங்களையும் கிளப்ப, பாஜக இந்தக் கூட்டணியை தங்களுடைய வெற்றிக்குச் சாதகமாகப் பார்க்கிறது பாஜக, இவரது வாக்குகள் மம்தாவின் முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்கும் என்றும் தங்களுக்கு ஹிந்து வாக்குகளை திரட்டுவதில் சிரமம் இல்லாமல் போய்விடும் என்றும் பாஜக பார்க்கிறது.

இவை ஒருபுறம் இருக்க, பெங்கால் அகெய்ன்ஸ்ட் பாசிஸ்ட் பாஜக-ஆர்.எஸ்.எஸ். என்ற குடிமைச் சமூக புது முயற்சியும் ‘பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள்’ என்பதை கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

இந்த இயக்கத்தில் இருக்கும் பத்திரிகையாளரும் வங்க மொழி திரைப்பட இயக்குநருமான அனிகெட் சட்டோபாத்யாய், கூறும்போது தங்கள் இயக்கமும் பரவலாக கவனம் பெற்று வருகிறது என்றார், ஆனால் மம்தாவை சித்திகியை வைத்து விமர்சிப்பது பாஜகவுக்கு சாதகமாகவே முடியும் என்று இடதுசாரி-காங். கூட்டணியை இவர் விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் 27% முஸ்லிம் மக்கள் உள்ளனர், இவர்களது ஓட்டுக்கள் எந்தக் கட்சிக்கும் பெரிய விஷயம்தான். மம்தா கட்சியும் முஸ்லிம் வாக்குகளை நம்பித்தான் இருக்கின்றன, பாஜக இந்த முஸ்லிம் வாக்குகளைத்தான் சிதறடித்து மம்தாவை தோற்கடிக்க முயற்சி செய்து வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: