மகத்தான வெற்றி: மு.க. ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து!
மகத்தான வெற்றி: மு.க. ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து!
ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. பல தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்துள்ள கட்சிகளுக்கும் திமுகவுக்கு இடையேயான வாக்கு வித்தியாசம் அதிகம் உள்ளதால் தங்களது வெற்றி உறுதியாகிவிட்டதாக கூறி தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
தமிழக தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றியை பதிவு செய்தற்காக மு.க.ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். தமிழக மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் சிறந்த முறையில் அவர் ஆட்சி செய்ய வேண்டும் என்றும் வாழ்த்து கூறியுள்ளார்.
Many congratulations to @mkstalin on a resounding victory in the Tamil Nadu assembly polls. I wish him a successful tenure and the very best in fulfilling the aspirations of people of Tamil Nadu.
இதேபோல், கேரள சட்டப்பேரவை தேர்தலில் முன்னணியில் உள்ள மார்க்சிஸ் ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் பிரனராயி விஜயன், மேற்கு வங்கத்தில் முன்னணீயில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தகுதியான வெற்றி என்றும் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு சிறப்பாக சேவையாற்ற தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஸ்டாலின் மற்றும் உடன் சார்ந்தவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மாநில உரிமை, மொழிப்பற்று என கருணாநிதி செதுக்கிய பாதையில் நீங்கள் பயணிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாநில உரிமைகளை காத்திருக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில தன்னாட்சி அதிகாரம் தொடர்பான விவகாரங்களுக்கு தொடர்ந்து முக்கியத்தும் அளிப்பீர்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.