சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கும் அறிவிப்பை வரவேற்கிறேன் - எல்.முருகன்

எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர்

தீயசக்தி திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்திட நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்.

 • Share this:
  சசிகலா அரசியலில் இருந்து விலகும் முடிவை வரவேற்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

  சசிகலா அவர்கள் சொல்லியிருக்கிற காரணங்களை அரசியல் ரீதியாக அனைவரும் வரவேற்க வேண்டும். நம்முடைய பொது எதிரி, தீயசக்தி திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்திட நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்.

  அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று, அவருடைய விருப்பங்களையும் தெரிவித்திருக்கிறார். தமிழக வளர்ச்சிக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் எதிராக விளங்கக்கூடிய திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் அவருடைய முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது.

  அவரால் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கனவு கண்டவர்களுக்கு எல்லாம் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறார்.

  அவருடைய அறிவிப்பை முழுமனதோடு வரவேற்கிறேன் என்றுள்ளார்.
  Published by:Vijay R
  First published: