தமிழகத்தில் பாஜக-வின் வேல்யாத்திரை தடையின்றி நடைபெற வேண்டுமென எல்.முருகன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.
தமிழ்க் கடவுள் முருகனை மையமாக வைத்து வெற்றிவேல் யாத்திரைக்கு பாஜக திட்டமிட்டது. இது முருகனின் அறுபடை வீடுகள் வழியாக நடைபெறும் ஆன்மீக பயணம் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டது. தமிழகத்தில் நடைபெறும் பாஜகவின் வேல் யாத்திரைக்கு எதிர்கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தமிழகத்தில் மத உணர்வை தூண்டும் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதை தொடர்ந்து பாஜக-வின் வேல்யாத்திரைக்கு தமிழக அரசு தடைவிதித்தது. மேலும் பாஜகவின் வேல்யாத்திரை அரசியல் நாடகம் என்றும், வாக்கு வங்கிக்காவே இந்த யாத்திரையை கையில் எடுத்துள்ளனர் என்று விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜக திருத்தணியில் திட்டமிட்டப்படி தடையை மீறி யாத்திரை நடத்த முயன்றனர். இதை தொடர்ந்து தமிழக காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதையடுத்து வேல்யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டுமென்று பாஜகவினர் நீதிமன்றத்தை அனுகினார். வேல்யாத்திரையால் மக்களுக்கு என்ன பயன்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி விரிவான விவரம் அளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டது.
தமிழகத்தில் வேல்யாத்திரையை திட்டமிட்டப்படி வெற்றிகரமாக நடத்தி முடிப்போம் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சூளுரைத்துள்ளார். இந்நிலைியல் வேல்யாத்திரை தடையின்றி நடைபெற வேண்டுமென எல்.முருகன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.
நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.