யார் இந்த எல். முருகன்? பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டதின் பின்னணி என்ன?

எல்.முருகன், தமிழக பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், தமிழக பாஜகவிற்கு இரண்டாவது முறையாக தலித் ஒருவர் தலைவராகியுள்ளார்.

யார் இந்த எல். முருகன்? பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டதின் பின்னணி என்ன?
எல். முருகன்
  • Share this:
தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நயினார் நகேந்திரன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகனை, தமிழக பாஜக தலைவராக நியமித்து, அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.

யார் இந்த எல். முருகன்?

1977ஆம் ஆண்டு பிறந்த எல்.முருகன், நாமக்கல் மாவட்டம் பரமத்தியை அடுத்த கோனூரைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்புக்குப் பிறகு, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பி.எல். படித்துவிட்டு, சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எல். பயின்றார். தற்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் எல்.முருகன், தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.


மேலும், சென்னை உயர்நீதிமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராகவும் உள்ள எல்.முருகன், தமிழக பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், தமிழக பாஜகவிற்கு இரண்டாவது முறையாக தலித் ஒருவர் தலைவராகியுள்ளார்.

ஏற்கெனவே, தலித் சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் கிருபாநிதி 2000-மாவது ஆண்டு தமிழக பாஜக தலைவராக பதவி வகித்த நிலையில், தற்போது, எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜக தலைவராக எல். முருகன் நியமனம் செய்யப்பட்டதின் பின்னணி என்ன?வீடியோ:
First published: March 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading