கட்சியின் வளர்ச்சியில் அக்கறை இன்றி பலர் நாற்காலிக்காகவே காங்கிரஸ் கட்சியில் இருப்பதாக குஷ்பு தெரிவித்துள்ளார். நியூஸ் 18க்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களே பாஜகவில் இணைய தூண்டியதாக கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்காததால் கட்சியை விட்டு விலகியதாக காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில் நியூஸ் 18க்கு பிரேத்ய பேட்டியளித்த குஷ்பு, 4 வருடங்களாக மனசாட்சியை கழட்டி வைத்துவிட்டே காங்கிரஸ் கட்சியில் இருந்ததாக தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், தான் பாஜகவில் இணைந்தாலும் பெரியாரிஸ்ட் என்பதில் பெருமை கொள்வதாக கூறினார்.
இலங்கை கிரிக்கெட் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் விவகாரத்தை திரைப்படத்தை திரைப்படமாக பார்க்கவேண்டும் என குஷ்பு தெரிவித்தார்.
பதவிக்காகவே சிலர் காங்கிரஸ் கட்சியில் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள குஷ்பு, அவர்கள் தங்களது வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபடுவதாகவும் சாடியுள்ளார்.
தமிழகத்தில் பாஜகவின் கொள்கைகளை சிலர் தவறாக சித்தரிப்பதாக கூறிய குஷ்பு, பாஜகவின் மேடைகளில் உண்மையை மட்டுமே பேச இருப்பதாகவும் அது வரும் தேர்தலில் பாஜகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.