தண்ணீரில் நீச்சல் அடிப்பவருக்கு தரையில் போராட தெரியாதா!.. - ராகுலை விமர்சிக்கும் குஷ்பு

தண்ணீரில் நீச்சல் அடிப்பவருக்கு தரையில் போராட தெரியாதா!.. - ராகுலை விமர்சிக்கும் குஷ்பு

குஷ்பு

மீனவர்களுடன் நீச்சல் அடிப்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுடன் குஸ்தி போடுவது எல்லாம் ஒரு நல்ல தலைவருக்கு அழகல்ல.

 • Share this:
  மீனவர்களுடன் நீச்சல் அடிப்பதும், மாணவர்களுடன் குஸ்தி போடுவதும் ஒரு நல்ல தலைவருக்கு அழகல்ல என ராகுல்காந்தி சுற்றுப்பயணம் குறித்து குஷ்பூ விமர்சனம் செய்துள்ளார்.

  நெல்லையில் நடந்த பாஜக பேரணியில் அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர் குஷ்பு கலந்துக்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு, “
  இந்த தேர்தலில் அதிமுக பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது. பாஜக கடந்த 6 வருடங்களாக நல்ல திட்டங்களை கொடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நல்ல திட்டங்களை தமிழகத்துக்கு கொடுத்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதிமுக அரசு மீது குற்றம் சொல்ல எதுவும் இல்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எந்தக்குற்றச்சாட்டும் இல்லை. பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் முடிவாகவில்லை. பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டு இருக்கிறது.

  உதயநிதி குறித்த கேள்விக்கு பதிலளித்த குஷ்பு உதயநிதி ஸ்டாலின் தேர்தல் போட்டியிடுகிறாரா இல்லையா என்பது குறித்து அவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்றார். காங்கிரஸ் தலைவர் ராகுலின் சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, “ ஒரு தலைவர் மக்களுக்கு என்ன நல்லது செய்ய முடியும் என்பதை சொல்ல வேண்டும். அதைவிடுத்து மீனவர்களுடன் நீச்சல் அடிப்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுடன் குஸ்தி போடுவது எல்லாம் ஒரு நல்ல தலைவருக்கு அழகல்ல. நீங்க என்ன மாற்றங்களை கொண்டு வருவீர்கள் என மக்களிடன் எடுத்து கூற வேண்டும். உங்களால் என்ன நல்ல திட்டங்களை கொண்டு வரமுடியும் என ஆதாரப்பூர்வமாக சொல்லுங்கள்.

  திராவிட முன்னேற்ற கழகம் , காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பத்தாம் வகுப்பு மாணவர்களுடன் குஸ்தி போட கற்றுத்தருவீர்களா. எரிவாயு விலை உயர்வு பற்றி பேசும் காங்கிரஸ் ஏன் போராட்டம் செய்ய சாலைக்கு வரவில்லை. கடலில் குதிப்பவருக்கு சாலையில் இறங்கி போராட முடியவில்லையா. ராகுல் குஸ்தி போடுவதை தண்ணீரில் நீச்சல் அடிப்பதையும் பார்த்தா மக்கள் வாக்களிக்கப்போகிறார்கள். ராகுல்காந்திக்கு எந்த கவலையும் இல்லை அதனால் தான் 30 நிமிடத்தில் தன்னால் தூங்க முடிகிறது என்கிறார். பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு நாட்டை பற்றி மக்களை கவலை இருக்கிறது அதனால்தான் அவர்களால் தூங்க முடியவில்லை. ராகுலுக்கு எந்த கவலையும் இல்லை தான் நிம்மதியாக உறங்கினால் போதும் என குஷ்பு விமர்சித்துள்ளார்.
  Published by:Ramprasath H
  First published: