பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று.. களத்தில் இறங்கிய மகன்

பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக வேட்பாளருக்கு கொரோனா தொற்று.. களத்தில் இறங்கிய மகன்

குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் மகன்

குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்புதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடைய கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இதையடுத்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூர் எஸ்.புதூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாயிகளுடன் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பரப்புரை செய்திருந்தார். உடல்நலக்குறைவை அடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று உறுதியானது.

  இந்த நிலையில் குறிஞ்சிபாடி தொகுதி திருவந்திபுரம், தொட்டி, திருமாணிகுழி உள்ளிட்ட பல பகுதியில் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்களின் மகன் கதிரவன் மக்களிடம் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார்.
  Published by:Vijay R
  First published: