சென்னையில் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தான் அதிக வேட்பாளர்கள் போட்டி

மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 4024 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமாக 7255 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

 • Share this:
  தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வாமாக வெளியாகி உள்ளது. சென்னையை பொறுத்த வரை மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தான் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

  கொளத்தூர் தொகுதி 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது புதிதாக உருவாக்கப்பட்டது. அதன் முதல் சட்டமன்ற உறுப்பினரே ஸ்டாலின் தான். 2011 மற்றும் 2016 என இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இதே தொகுதியில் மூன்றாவது முறையாக ஸ்டாலின் இங்கு போட்டியிடுகிறார்.

  கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து அதிமுக கட்சியிலிருந்து ஆதிராஜாராம் போட்டியிடுகிறார். அதிமுக-வில் சீனியரான ஆதிராஜாராம் அந்த கட்சியில் 47 ஆண்டுகளாக இருக்கிறார். அமமுக சார்பில் ஆறுமுகம், நாம் தமிழர் கட்சி சார்பில் கெமிலஸ் செல்வா, மநீம சார்பில் ஜெகதீஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

  இதனிடையே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணைம் இன்று வெளியிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் 4024 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமாக 7255 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

  அதில் 4461 பேரின் வேட்புமனு ஏற்கப்பட்டு, 2787 பேரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. 444 பேர் வேட்புமனுக்களை திரும்ப பெற்று கொண்டனர் என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 77 பேர் போட்டியிடுகின்றனர். பவானிசாகர் மற்றும் வால்பாறையில் குறைந்தபட்சமாக 6 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

  சென்னையை பொறுத்தவரை கொளத்தூர் தொகுதியில் அதிகபட்சமாக 36 பேர் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக தியாகராயநகர் தொகுதியில் 14 பேர் போட்டியிடுகின்றனர்.

   
  Published by:Vijay R
  First published: