எங்கிட்ட எவ்வளவு சொத்து இருக்குன்னு கேளுங்கய்யா? - நிரூபர்களை கேள்வி கேட்க வைத்த கே.என்.நேரு

கே.என்.நேரு

தி.மு.க தலைவரே வேட்பாளர்களை தேர்வு செய்தார். என்னுடைய பங்களிப்பு எதுமில்லை. தலைவரை திட்டிவிட்டு கட்சியில் இருக்க முடியாது என்பதால், என்னைத் திட்டுகிறார்கள்.

  • Share this:
தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு,  திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட, தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான விஸ்வநாதனிடம் இன்று மதியம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.அப்போது, அவரது தம்பி கே.என். ரவிச்சந்திரன், தி.மு.க மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

தேர்தல் பொது பார்வையாளர் கிரீஷ் IAS வேட்பு மனு தாக்கல் நிகழ்வுகளை பார்வையிட்டார். அவருக்கு மாற்று வேட்பாளராக, தி.மு.க மாநகரச் செயலாளரும், முன்னாள் துணைமேயருமான மு.அன்பழகன் மனுத்தாக்கல் செய்தார்.

வேட்பு மனுத்தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய கே.என்.நேரு, ‘தி.மு.க ஆட்சியமைத்து, மு.க.ஸ்டாலின் முதல்வராக அமர்ந்த பிறகு, அனைத்து வசதிகள் கொண்ட நவீன நகரமாக திருச்சி மாற்றப்படும். 2வது தலைநகரமாக அல்ல.
தி.மு.க கொண்டு வந்த திட்டங்களால்தான் தமிழ்நாடு தற்போது மின் மிகை மாநிலமாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஏதாவது ஒரு மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளாரா.ஜெயலலிதா மரணத்திற்கு தி.மு.க தான் காரணம் என்று தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். நான் உட்பட தி.மு.க-வினர் மீது வழக்கு போட்டனர். மன உளைச்சல் ஏற்பட்டது. அதற்காக, கொலை முயற்சி என்று சொல்லலாமா என்றார்.

தி.மு.க வேட்பாளர் தேர்வில் அதிருப்தியா? என்று கேட்டதற்கு,’அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாது. தி.மு.க தலைவரே வேட்பாளர்களை தேர்வு செய்தார். என்னுடைய பங்களிப்பு எதுமில்லை. தலைவரை திட்டிவிட்டு கட்சியில் இருக்க முடியாது என்பதால், என்னைத் திட்டுகிறார்கள்.காங்கிரஸ் உட்பட கூட்டணி கட்சியினருக்கு போதுமான அளவிற்கு செய்திருக்கிறோம். இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது.தி.மு.க-வின் கூட்டணி கட்சியினர், சிறப்பான ஒத்துழைப்பு அளிக்கின்றனர். திருச்சியில் உள்ள, 9 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறும்" என்றார்.

*பிரச்சார வாகனத்தில் நேரு*
முன்னதாக, வெஸ்ட்ரி பள்ளி அருகிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர். கூட்டமாக மனுத்தாக்கல் செய்தால் பிரச்சனை வரும்; வழக்குகள் பாயும் என்பதால், நேரு பிரச்சார வாகனத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார்.

*நீ  கேளேன்*
வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டு, படு கேஷூவலாக வந்த நேரு, "அவனவன், 2000 கோடி, 3000 கோடி சொத்துங்கிறான்.  எங்கிட்ட எவ்வளவு சொத்து இருக்குன்னு கேட்க மாட்டேங்கிறீங்க" கேளுங்கய்யா?  என்றார் சிரித்துக் கொண்டே.
அதற்கு  நிருபர் ஒருவர், கடன்ல இருப்பதா கேள்விப்பட்டோம்.  அதான் கேட்கலை" என்று சொல்ல, அதைக்கேட்டு சிரித்துக் கொண்டே பிரச்சாரத்திற்கு புறப்பட்டார் நேரு.
Published by:Ramprasath H
First published: