KK Shailaja: பினராயி தலைமையிலான புதிய அமைச்சரவையில் ஷைலஜாவுக்கு இடமில்லை!

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா இடம்பெற மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா இடம்பெற மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது

  • Share this:
    கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா இடம்பெற மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

    கேரள சட்டப்பேரவைக்கான தேர்தல்  கடந்த மாதம் நடைபெற்றது. வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்ட நிலையில்,  ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி  மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளை கைப்பற்றியது.  பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் வரும் 20ம் தேதி பதவியேற்கவுள்ளனர்.

    இந்நிலையில், கேரளாவில் கொரோனா முதல் அலையை சிறப்பாக கையாண்டதற்காக பாராட்டுப் பெற்ற சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா,  புதிய அமைச்சரவையில் இடம் பெற மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

    அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மாத்தனூர் தொகுதியில் போட்டியிட்ட ஷைலஜா 60,963 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். கேரள தேர்தல் வரலாற்றில் இது புதிய சாதனை ஆகும்.  மேலும் கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்தியதற்காக சர்வதேச அளவில் ஷைலஜா பாராட்டுகளை பெற்றார்.

    தற்போது அவர் அமைச்சரவையில் இடம் பெறமாட்டார் என்ற தகவல் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.    அமைச்சர்களுக்கு இரண்டாவது முறை வாய்ப்பு அளிக்கக் கூடாது, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஷைலஜா அமைச்சரவையில் இடம் பெறமாட்டார் என கூறப்படுகிறது. முதல்வர் என்பதால் பினராயி விஜயனுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    புதிதாக அமையவுள்ள  அமைச்சரவையில் 21 அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாக கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய அமைச்சரவையில் முதல்வர் பினராயி விஜயனோடு சேர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 12 பேர் பதவியேற்கவுள்ளனர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 4 பேர், கேரள காங்கிரஸ் (எம்), மதசார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கூட்டணி கட்சிகள் சார்பில் தலா ஒருவர் அமைச்சரவையில் இடம்பெறவுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: