கேரளாவில் பாஜக கூட்டணியிலிருந்து முக்கிய கட்சி விலகல்!

கேரளாவில் பாஜக கூட்டணியிலிருந்து முக்கிய கட்சி விலகல்!

கேரள தேர்தல் 2021

பாலா தொகுதியை பி.சி.தாமஸுக்கு தருவதற்கு பாஜக முன்வந்துள்ளது. இருப்பினும் சில காரணங்களுக்காக அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது

  • Share this:
கேரள சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பி.சி.தாமஸ் தலைமையிலான கேரள காங்கிரஸ் கட்சி, பாஜக கூட்டணியிலிருந்து விலகியுள்ளது.

கேரளாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த பி.சி.தாமஸ் தலைமையிலான கேரள காங்கிரஸ் கட்சி, திடீரென நேற்று பாஜக கூட்டணியிலிருந்து விலகியுள்ளது. முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாத் தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தவர் பி.சி.தாமஸ். 2004-ல் மூவாட்டுப்புழா பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கேரளாவில் முதல் தேர்தல் வெற்றியை பெற்றுத் தந்தவர் பி.சி. தாமஸ்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் பி.சி.தாமஸ் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது, ஆனால்
எதிர்வரும் கேரள சட்டமன்ற தேர்தலில் கேரள காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படாததால் அதிருப்தி அடைந்த பி.சி.தாமஸ் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, கேரள காங்கிரஸின் மற்றுமொரு பிரிவில் தன்னுடைய கட்சியை இணைத்துள்ளார்.

முதலில் பாலா தொகுதியை பி.சி.தாமஸுக்கு தருவதற்கு பாஜக முன்வந்துள்ளது. இருப்பினும் சில காரணங்களுக்காக அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது. பி.ஜே.ஜோசப் தலைமையிலான கேரள காங்கிரஸ் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கடுதுருத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பி.சி.தாமஸ், பி.ஜே.ஜோசப் தலைமையிலான கேரள காங்கிரஸில் இணைந்தார். இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி, மான்ஸ் ஜோசப் உட்பட கேரள காங்கிரஸின் மூத்த தலைவர்கள் இணைப்பு விழாவில் பங்கேற்றார்கள். இரு கட்சிகளும் இணைந்து பொதுவான சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் என தெரிவித்தனர்.
Published by:Arun
First published: