Home /News /politics /

வேட்பாளர் அறிவோம் - கதிர் ஆனந்த் (வேலூர் தி.மு.க.)

வேட்பாளர் அறிவோம் - கதிர் ஆனந்த் (வேலூர் தி.மு.க.)

கதிர் ஆனந்த்

கதிர் ஆனந்த்

தற்போது 44 வயதாகும் கதிர் ஆனந்த் தன்னுடைய 33-ம் வயதில் அரசியலில் முழு நேரமாகப் பணியாற்றத் தொடங்கினார்.

  • News18
  • Last Updated :
வேலூர் மக்களவைத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த்.

திமுக பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த். தற்போது 44 வயதாகும் கதிர் ஆனந்த் தன்னுடைய 33-ம் வயதில் அரசியலில் முழு நேரமாகப் பணியாற்றத் தொடங்கினார். தற்போது கிங்ஸ்டன் கல்வி நிறுவனத் தலைவராக உள்ளார்.

கதிர் ஆனந்த் சென்னை லயோலா கல்லூரியில் வணிகவியல் படிப்பை நிறைவு செய்துள்ளார். முதுகலை படிப்பை அமெரிக்காவில் உள்ள பால்ட்வின் கல்லூரியில் சர்வதேச பிஸினஸ் பிரிவில் முடித்துள்ளார்.

கட்சிக்குள் கதிர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு நிறைய சலசலப்புகள் ஏற்பட்டாலும் துரைமுருகன் பிரசாரம் கதிர் ஆனந்தின் வெற்றிக்கு உதவும் எனக் கூறி வருகின்றனர் கட்சியினர்.

மேலும் பார்க்க: தமிழிசைக்கு டெல்லி கொள்கை தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி
Published by:Rahini M
First published:

Tags: Elections 2019, Lok Sabha Election 2019, Lok Sabha Key Candidates, Tamil Nadu Lok Sabha Elections 2019, Upper North Tamil Nadu Lok Sabha Elections 2019, Vellore S22p08

அடுத்த செய்தி