ஹோம் /நியூஸ் /அரசியல் /

வேட்பாளர் அறிவோம்: கரூர் அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை

வேட்பாளர் அறிவோம்: கரூர் அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை

தம்பிதுரை

தம்பிதுரை

அதன் பின்னர் எம்.ஜி.ஆர் மீது கொண்ட தீவிர விசுவாசத்தால் அதிமுக-வில் இணைந்தார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  கரூர் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார் தம்பிதுரை.

  கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மு.தம்பிதுரை. 1947-ம் ஆண்டு பிறந்த தம்பிதுரை, 1965-ம் ஆண்டில் திமுக-வில் இணைந்து கட்சிப் பணியைத் தொடங்கினார். அதன் பின்னர் எம்.ஜி.ஆர் மீது கொண்ட தீவிர விசுவாசத்தால் அதிமுக-வில் இணைந்தார். ஆங்கிலம் பேசும் திறனால் தொடக்கத்திலேயே எம்.பி பதவிக்கான வேட்பாளராக அதிமுக-வை மக்களவையில் அறிமுகம் செய்தார்.

  1985-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரையில் மக்களவையின் துணைத்தலைவராகப் பதவி வகித்து வந்துள்ளார். மத்தியில் சட்டம், நீதி மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும் 1998-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரையில் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

  தற்போது மக்களவையின் துணை சபாநாயகராக உள்ள தம்பிதுரை கரூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். தற்போது 2019 மக்களவைத் தேர்தலிலும் கரூர் தொகுதியிலேயே தம்பிதுரை அ.தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார்.

  மேலும் பார்க்க: கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டி ஏன்?

  Published by:Rahini M
  First published:

  Tags: Cauvery Delta Lok Sabha Elections 2019, Election 2019, Karur S22p23, Lok Sabha Election 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019, Thambidurai