முகப்பு /செய்தி /அரசியல் / ஒட்டுமொத்த அ.தி.மு.கவும் சசிகலாவிடம் சேரும் - கார்த்தி சிதம்பரம் உறுதி

ஒட்டுமொத்த அ.தி.மு.கவும் சசிகலாவிடம் சேரும் - கார்த்தி சிதம்பரம் உறுதி

கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியில் எந்த தொண்டர் போனாலும் வருந்தத்தக்கது.  ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு நேர் எதிராக இருக்கும்  பா.ஜ.கவில் சேருவது,  அவர்களுக்கு எந்த கொள்கை பிடிப்பும் இல்லை என்பதைக் காட்டுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்தந்த மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சியினரும் எதிர்கட்சியினரும் தேர்தலில் வெற்றிபெற கடுமையாக உழைத்து வருகின்றனர். அதேநேரம் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு செல்லும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் சிவகங்கை (காங்கிரஸ்) எம்.பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியில் எந்த தொண்டர் போனாலும் வருந்தத்தக்கது.  ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு நேர் எதிராக இருக்கும்  பா.ஜ.கவில் சேருவது அவர்களுக்கு எந்த கொள்கை பிடிப்பும் இல்லை என்பதைக் காட்டுகிறது. காங்கிரஸில் இருந்தவரை கொள்கை பிடிப்போடு இருந்தார்களா? என்பது சந்தேகமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ”விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பாக உள்ளது. நடைமுறையில் பல சந்தேகங்கள் எழுகிறது. கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு மீண்டும் கடன் கிடைக்குமா? உள்ளிட்டவை குறித்த தெளிவு வேண்டும். இதுகுறித்து சட்டரீதியாகவும் தெளிவு பெற வேண்டியுள்ளது” என்றார்.

மேலும், ’’அரசியல் கவனிப்பவராக மீண்டும் சொல்கிறேன். ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலாவிடம்தான் சேரப்போகிறது.  இப்போதோ, விரைவிலோ அவரிடம் செல்லும். அதிமுகவில் தற்போதுள்ள அனைத்து நிர்வாகிகளையும்  சசிகலாதான் நியமித்தார். முதலமைச்சரையும் அவர்தான் கொண்டு வந்தார். ஆகையால் சசிகலாவிடம்  அதிமுக செல்வது இப்போதா?  அல்லது தேர்தல் தோல்விக்கு பிறகா ? என்பது தெரியவில்லை” என்றும் கூறியுள்ளார்.

`சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  சசிகலாவின் சாதி குறித்து பேசியது வருந்தத்தக்கது மற்றும் கண்டிக்கத்தக்கது. சாதி என்பது இந்தியாவின் சாபக்கேடு. ட்விட்டர் ட்ரண்டிங் என்பதை விட நான் பார்த்த வரை,  தமிழ்நாட்டைப் பொருத்தவரை பா.ஜ.கவை மக்கள் ஏற்கவில்லை என்பது செல்லும் இடங்களில் உணர முடிகிறது.

பெட்ரோல் விலை விரைவில் செஞ்சுரி (₹ 100 ஆகும்) அடித்து விடும். செஸ் வரி என்பது இந்திய அரசியல் சாசனத்திற்கு மாநிலங்களுக்கு எதிரானது” என்றும் தெரிவித்துள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Congress, Karthi chidambaram