ரஜினியும் நானும் அரசியலில் இணைவோம் - கமல்ஹாசன் அதிரடி

ரஜினியும் நானும் அரசியலில் இணைவோம் - கமல்ஹாசன் அதிரடி
  • News18
  • Last Updated: November 19, 2019, 7:21 PM IST
  • Share this:
தானும் நடிகர் ரஜினிகாந்தும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அரசியலில் இணைவோம் என்று தெரிவித்திருக்கும் நடிகர் கமல்ஹாசன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து நடிகர் ரஜினிகாந்த் சொன்னது விமர்சனம் அல்ல நிதர்சனம் என்றும் கூறியுள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு ஒடிஷாவிலுள்ள நாட்டின் மிகப்பெரிய திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகமான செஞ்சூரியன் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இதற்காக ஒடிஷா சென்ற கமல்ஹாசன் நிகழ்வை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். அப்போது விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், ஒடிசாவில் முதன்மையான மேம்பாட்டு பல்கலைக்கழகமான செஞ்சூரியன் சார்பாக டாக்டர் பட்டம் வழங்கியதும் ஒடிசா முதல்வர் கையால் அதை பெற்றதும் எனக்கு பெருமைக்குரியது. மகிழ்ச்சிக்குரியது.


தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு ரஜினியும் நானும் இணைந்து பயணிப்போம். ரஜினியுடன் இணைந்தால் அது அதிசயம் இல்லை. ரஜினியுடன் அரசியலில் இணைவதற்கான அவசியம் வந்தால் நிச்சயம் அதை தெரிவிப்போம்.

இலங்கையில் ஒரு நல்ல தலைவராக வரவேண்டும் என்றால் ஒரு நியாயமான ஆட்சியை கோத்தபாய ராஜபக்ச தர வேண்டியது அவரது கடமை. நாடு முழுவதும் நிலவி வந்த மதம் தொடர்பான தர்க்கம் தற்போது கல்வி நிலையங்களுக்கு உள்ளேயும் நுழைந்திருப்பதையே ஐஐடி மாணவி பாத்திமாவின் மரணம் காட்டுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து நடிகர் ரஜினிகாந்த் சொன்னது விமர்சனம் அல்ல நிதர்சனம்” என்றார்.
First published: November 19, 2019, 6:22 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading