ஜெயலலிதாவின் பேராசை... கலைஞரிடம் எனக்கு நன்றியுண்டு - மனம் திறந்த கமல்ஹாசன்
ஜெயலலிதாவின் பேராசை... கலைஞரிடம் எனக்கு நன்றியுண்டு - மனம் திறந்த கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன்
தேசியகீதத்தில் திராவிடம் இருக்கும்வரை திராவிடம் இருக்கும். உண்மையான திராவிடம் நாடுதழுவியது என்பதுதான் என்னுடைய கருத்து. நாடு முழுவதும் திராவிடம் இருக்கிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுடன் நியூஸ் 18 தமிழ்நாடு நடத்திய சிறப்பு நேர்காணலின் சில கேள்விகளும் பதில்களும் உங்கள் பார்வைக்கு.
கேள்வி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அரசியல்வாதியாக நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? பதில்: ஜெயலலிதாவுக்கு அதற்கான கல்வியும் அறிவும் இருந்தது. ஆனால் அவர்களுடைய தனிப்பட்ட பேராசை வேறுவிதமாக மாற்றியது. தமிழகத்தையும் சீரழித்தது என்றுதான் நம்புகிறேன்.
கேள்வி: மறைந்த முன்னாள் முதல்வர்கருணாநிதி அவர்களுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு அவருடனான நட்பு குறித்து... பதில்: நட்பு என்று சொல்வது என் சந்தோஷத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்குமேதவிர அவருடைய வயதுக்கு அது சரியாக இருக்காது. அவர் இரண்டு தலைமுறைக்கு மூத்தவர்.
கேள்வி: முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் உங்களுக்கு பிடித்த விஷயங்ககள். பதில்: மேடைப்பேச்சுகள் கற்றுக்கொண்டது சினிமா வசனங்களும், அடுக்குமொழியில் பேசிக்கற்றுக்கொண்டதும் இளங்கோவன், கலைஞர் அவர்களிடம் இருந்துதான். அந்த நன்றி எல்லாம் உண்டு. அதுவேறு அரசியல் என்பது வேறு.
கேள்வி: அரசியலில் கருணாநிதி தவிர்த்து இருக்கலாம் என நீங்கள் கருதுவது எது.. பதில்: பல விஷயங்களை இருக்கிறது அதை ஏன் இன்று சொல்ல வேண்டும். அதை திருத்துவதற்கான வேலைகளை செய்யலாமே தவிர குறை சொல்லிக்கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை. நல்லதும் நிறைய செய்திருக்கிறார். அந்தக்காலம் முடிந்துவிட்டது.
கேள்வி: திராவிடம் என்ற கருத்து தமிழகம் இருக்கும்வரை இருக்கும் என்று சொல்லியிருந்தீர்கள்.. அதில் இன்னும் மாற்றுக்கருத்து இல்லையா பதில்: அது எப்படி மாற முடியும். பெயரைக்கூட மாற்றிக்கொள்ளலாம். ஆனால் இது சரித்திர உண்மை இதை மாற்றவே முடியாது. தேசியகீதத்தில் திராவிடம் இருக்கும்வரை திராவிடம் இருக்கும். உண்மையான திராவிடம் நாடுதழுவியது என்பதுதான் என்னுடைய கருத்து. நாடு முழுவதும் திராவிடம் இருக்கிறது.அதற்கான அடையாளங்கள் இருக்கிறது. மனிதர்கள் இருக்கின்றனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.