• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • உங்களுக்கும் கோபம் இருந்தால்தான் மாற்றம்வரும்- கோவை பிரச்சாரத்தில் கமல்ஹாசன்

உங்களுக்கும் கோபம் இருந்தால்தான் மாற்றம்வரும்- கோவை பிரச்சாரத்தில் கமல்ஹாசன்

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

முதல் முறை ஓட்டு போடுபவர்கள் நிறைய பேர் இருக்காங்க வாக்களிக்க பணம் வாங்குபவர்களிடம் படித்தவர்கள் பேசி புரிய வைக்க வேண்டும். உங்களை விலைக்கு வாங்கி இருக்காங்க அப்படின்னு..

  • Share this:
    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவையில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார். கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொண்டார். கோவை வடவள்ளி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன் பேசுகையில், “ கோபம் எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் இருக்கணும் அப்படி இருந்தால் தான் மாற்றம் ஏற்படும். இங்கே முன்வரிசையில் இருக்கிற எங்கள் கட்சி தொண்டர்கள் சகோதர, சகோதரிகள் வெற்றி நிச்சயம் என்கிறார்கள். ஆனால் அந்த நம்பிக்கை பின் வரிகளுக்கும் பரவ வேண்டும்.

    அரசியல்வாதிகள் ஆளாளுக்கு ஏழெழு தலைமுறைக்கும் சேர்த்து வச்சுட்டாங்க. நீங்கள் உங்கள் அடுத்த தலைமுறைக்கு யோசிக்காமல் விட்டால் அது ஒருவிதமான துரோகம். தமிழகத்தை செழிப்பான ஒரு மாநிலமாக மாற்ற வேண்டும். இதில் என்ன ஒரு முக்கியமான சூழல் இருக்கிறது. முதல் முறை ஓட்டு போடுபவர்கள் நிறைய பேர் இருக்காங்க. வாக்களிக்க பணம் வாங்குபவர்களிடம் படித்தவர்கள் பேசி புரிய வைக்க வேண்டும். உங்களை விலைக்கு வாங்கி இருக்காங்க அப்படின்னு. தற்போது நீங்கள் தான் அவர்களுக்குப் புத்தி சொல்ல வேண்டும். நாங்கள் வரும்பொழுது சாலைகள் விரிவுபடுத்தி வைத்திருக்கப்படும். பாலம் கட்டி முடிக்கப்படும். திறந்த சாக்கடைகள் இல்லாமல் செய்யப்படும்” என்றார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: