பிரசாந்த் கிஷோர் நாங்கள் வைத்த தேர்வில் தேர்வாகவில்லை - கமல்ஹாசன்

பிரசாந்த் கிஷோர் நாங்கள் வைத்த தேர்வில் தேர்வாகவில்லை - கமல்ஹாசன்

கமல்ஹாசன்

பிராசாந்த் கிஷோரை மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசகராக நியமிக்க திட்டமிட்ட நிலையில் அவர் நாங்கள் வைத்த தேர்வில் தேர்வாகவில்லை என கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்

  • Share this:
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யயம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியாவை ஆதரித்து கமலஹாசன் மயிலாப்பூர் தொகுதிகுட்பட்ட நொச்சிக்குப்பம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோவை தெற்கு தொகுதியில் மட்டும் பாஜக வெற்றி பெற கூடிய நிலைமை தெரிந்ததால், அந்த ஒரு தொகுதியில் கூட அக்கட்சி வெற்றி பெறக்கூடாது என்பதற்காக கோவை தொகுதியை தேர்வு செய்ததாக தெரிவித்தார்.

பிரதமரின் மான் கீ பாத் நிகழ்ச்சியை விமர்சனம் செய்த கமலஹாசன், எனக்கு 'டான்கி'(கழுதை) பாத்தே புரியாதபோது தனக்கு மான் கீ பாத் புரியவில்லை என்று விமர்சனம் செய்தார்.

திமுகவின் அரசியல் ஆலோசகராக உள்ள பிரசாந்த் கிஷோரை மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசகராக நியமிக்க திட்டமிட்ட நிலையில் அவர் தாங்கள் வைத்த தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று கமல் விமர்சித்தார். மேலும் பிரசாந்த் கிஷோர் மக்கள் நீதி மய்யத்தின் திட்டங்களை பிரதி எடுத்து திமுகவிற்கு ஆலோசனை வழங்குவதாகவும் விமர்சித்தார்.

முன்னதாக தியாகராய நகர் தொகுதியில் தொகுதியில் போட்டியிடும் பழ.கருப்பையா வை ஆதரித்து கமலஹாசன் மேற்கு மாம்பலத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
Published by:Vijay R
First published: