இளைஞர்களுக்கு இ-பைக், மகளிருக்கு தனி வங்கி... அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட கமல்ஹாசன்

கமல்ஹாசன்

ஒவ்வொரு சீருடைப் பணியிலும் 50 சதவீத பெண்கள் இருப்பது உறுதிசெய்யப்படும் என்று அவர் அறிவித்தார்.

 • Share this:
  மக்கள் நீதி மய்யம் கட்சி ஆட்சிக்கு வந்தால், 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உறுதியளித்துள்ளார்.

  இளைஞர்கள், விளையாட்டு மேம்பாடு மற்றும் பெண்கள் நலவாழ்வுக்கான தலா 7 செயல் திட்டங்களை கமல்ஹாசன் அறிவித்தார். அதன்படி, மக்கள் நீதி மய்யம் தலைமையிலான அரசு அமையும்போது, ஆட்சிக்காலத்துக்குள் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உறுதிசெய்யப்படும் என்று தெரிவிததார்.

  அனைத்து பட்டதாரிகளுக்கும் வசிப்பிடத்திலிருந்து 100 கிலோமீட்டருக்குள் பணி கிடைப்பது உறுதிப்படுத்தப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.5 அல்லது அதற்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இளைஞருக்கு சிறப்பு நிதி சலுகை,முதல்முறை தொழிலாளர்களுக்கு வட்டியில்லா மின்சார பைக்குகள் வழங்கப்படும் என்று கமல்ஹாசன் உறுதியளித்தார்.

  ஒவ்வொரு சீருடைப் பணியிலும் 50 சதவீத பெண்கள் இருப்பது உறுதிசெய்யப்படும் என்று அவர் அறிவித்தார். துன்பத்தில் இருக்கும் பெண்கள் இரவு நேரத்தில் தங்குவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் அவசரகால இலவச விடுதிகள் அமைக்கப்படும். அதோடு, 181 என்ற பெண்களுக்கான உதவி எண்ணில் பதிவுசெய்யப்படும் புகார்கள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கும் செயல்முறை ஏற்படுத்தப்படும் என்று கமல்ஹாசன் அறிவித்தார்.

  மாவட்ட அளவில் மகளிர் வங்கி உருவாக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு முறை இலவச ஆரோக்கியம் மற்றும் கருத்தரிப்பு பரிசோதனை மேற்கொள்ள அரசு ஏற்பாடு செய்யும் என்று மக்கள் நீதி மய்யம் உறுதியளித்துள்ளது. பொது- தனியார் கூட்டு முயற்சியில் ஒவ்வொரு பஞ்சாயத்து மற்றும் ஒன்றிய அளவில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: