கமல்ஹாசன் முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை டிசம்பர் 13-ல் தொடங்குகிறார்

கமல்ஹாசன்

தேர்தல் பிரச்சாரத்தை வரும் 13-ம் தேதி மதுரையில் தொடங்கி தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 16-ம் தேதி வரை பிரச்சாரம் செய்ய உள்ளார்.

 • Share this:
  தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை, டிசம்பர் 13 ஆம் தேதி மதுரையில் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்லை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பது, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

  இது குறித்து அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை வரும் 13-ம் தேதி மதுரையில் தொடங்கி தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 16-ம் தேதி வரை பிரச்சாரம் செய்ய உள்ளார். கட்சியின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பெரும் எழுச்சியுடன் கலந்து கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

  தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை கடந்தமாதமே மதுரையில் தொடங்குவதற்கு கமல்ஹாசன் திட்டமிட்டிருந்தார். ஆனால், கரோனா நோய் பரவல்காரணமாக அனுமதி கிடைக்காததால் தேர்தல் பிரச்சாரத்தை தள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: