`மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமல் நீடிப்பார்' - பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

`மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமல் நீடிப்பார்' - பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமல் நீடிப்பார் என்றும் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க அவருக்கு அதிகாரம் வழங்கியும் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 • Share this:

  காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்த கூட்டத்தில், 600 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். முன்னதாக செண்டை மேளம், தாரை தப்பட்டை உள்ளிட்டவை முழங்க மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநகராட்சி தடையை மீறி வானகரத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன.

  நவம்பர் மாதம் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று கூடிய பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் நிரந்தர தலைவராக கமல் ஹாசன் செயல்படுவார் என்றும், தேர்தல் கூட்டணி, வியூகம் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை கமல் ஹாசனுக்கு அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், எழுவர் விடுதலை தொடர்பாக அனைத்துக் கட்சிகளையும் மாநில அரசு ஒருங்கிணைத்து, அழுத்தம் தரவேண்டும், மாநில அரசு வாங்கியுள்ள கடன் குறித்து தேர்தலுக்கு முன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பன உள்பட மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  Published by:Ram Sankar
  First published: