வேட்பாளர் அறிவோம் - ஜோதிமணி ( கரூர் காங்கிரஸ் )

ஜோதிமணி

கரூர் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களவைத் தேர்தலில் ஜோதிமணி போட்டியிடுகிறார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கரூர் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணி போட்டியிடுகிறார்.

  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஜோதிமணி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., எம்பில்., படிப்பை நிறைவு செய்துள்ள ஜோதிமணி தன்னுடைய 22-ம் வயதிலேயே அரசியலில் இணைந்துவிட்டார்.

  இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஆகப் பணியாற்றியுள்ள ஜோதிமணி, இதுவரையில் சட்டமன்றத் தேர்தலில் ஒரு முறையும் மக்களவைத் தேர்தலில் ஒரு முறையும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்துள்ளார்.

  அரசியல் பயணத்தில் இருமுறை பஞ்சாயத்து கவுன்சிலராகவும் தமிழக இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தமிழக சென்சார் போர்டிலும் ஜோதிமணி உறுப்பினாரக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாவல், சிறு கதைகள் எழுதி வெளியிட்டுள்ள ஜோதிமணி இலக்கிய விருதுகளுக்கும் சொந்தக்காரர் ஆவார்.

  Published by:Rahini M
  First published: