பாஜகவின் அறிவுசார் பிரிவிற்கு புதிய தலைவர் நியமனம்

பாஜகவில் இணைந்த ஜோதிடர் ஷெல்வி

தமிழக பாஜகவில் இருந்தும் அறிவுசார் பிரிவின் தலைவர் பதவியில் இருந்தும் அர்ஜூன மூர்த்தியை கட்சி தலைமை நீக்கியது.

  • Last Updated :
  • Share this:
பிரபல ஜோதிடர் ஷெல்வி பாஜகவில் இன்று  இணைந்தார். மேலும் தமிழக பாஜகவின்  அறிவுசார் பிரிவின் தலைவராகவும் பதவி ஏற்க உள்ளார்.

தமிழக பாஜகவில் பல்வேறு அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் ,  தொழில் அதிபர்கள் நாள்தோறும் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் தேசிய முதல் உள்ளூர் வரை உள்ள அரசியல் பிரபலங்களின் ஜாதகத்தை கணிக்கும்   பிரபல ஜோதிடர் ஷெல்வி இன்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் தி.நகரில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில் பாஜகவில் இணைந்தார்.

எனவே நேற்று ரஜினிகாந்த் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் அவர் புதிதாக துவங்க உள்ள கட்சிக்கு  பாஜகவில் இருந்து  வந்த அர்ஜுன மூர்த்திக்கு ரஜினி மக்கள் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பினை தொடர்ந்து தமிழக பாஜகவில் இருந்தும் அறிவுசார் பிரிவின் தலைவர் பதவியில் இருந்தும் அர்ஜூன மூர்த்தியை கட்சி தலைமை நீக்கியது.

எனவே இன்று பாஜகவில் இணைந்து உள்ள ஜோதிடர் ஷெல்விக்கு அறிவுசார் பிரிவின் தலைவராக தமிழக பாஜக தலைமை நியமித்து உள்ளதாகவும் விரைவில் இவர் இப்பதவியினை ஏற்க உள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published: