HOME»NEWS»POLITICS»its too late we are not goint to accept bharat ratna award for netaji said his daughter srs ghta

`நேதாஜிக்கு பாரத ரத்னா விருது வேண்டாம்... இந்த விருது டூ லேட்!’ என்று நேதாஜியின் மகள் விமர்சனம்...  

இந்தியாவின் உயரிய விருதுகளில் முதன்மையான பாரத ரத்னாவை தான் மதிப்பதாகவும் அந்த விருது உண்மையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு மேலும் பெருமை சேர்ப்பது மட்டுமல்லாமல் அந்த விருதுக்கே ஒரு அழகு நேதாஜி அவர்களால் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

`நேதாஜிக்கு பாரத ரத்னா விருது வேண்டாம்... இந்த விருது டூ லேட்!’ என்று நேதாஜியின் மகள் விமர்சனம்...  
Netaji Subhash Chandra Bose
  • Share this:

அடால்ப் ஹிட்லரை சந்தித்து, 'எனக்கு அரசியல் குறித்து யாரும் கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை' என்று முகத்திற்கு நேராக பேசிவிட்டு வந்த மாவீரர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவரை பற்றிய சமீபத்திய செய்தியை தெரிந்துகொள்ளும் முன் சுபாஷ் சந்திரபோஸை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

சுபாஷ் சந்திரபோஸ் (Subash Chandra Bose) 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் ஒரிசாவின் கட்டாக்கில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தேவிக்கு மகனாக பிறந்தார். குழந்தை பருவத்திலிருந்தே ஒரு சிறந்த மாணவராக போஸ் திகழ்ந்தார். 1911ஆம் ஆண்டு பிரசிடென்சி கல்லூரியில் இணைந்தார். பேராசிரியர் ஓட்டன் என்பவரை இந்திய விரோத கருத்துகளுக்காக தாக்கியதாக கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார். பின் போஸ், கல்கத்தா பல்கலைகழகத்தில் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் பட்டம் பெற்றார்

1918-ல் BA தத்துவவியலில் பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டு கேம்பிரிட்ஜ், ஃபிட்ஸ் வில்லியம் கல்லூரியில் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வென்றார். பின்னர் தனது தந்தையின் விருப்பத்திற்கு இணங்க, சிவில் சர்வீஸ் துறையில் வேலைக்கு இணைந்தார். ஆனால், அது நீண்ட காலம் நிலைக்கவில்லை. ஏனெனில், ஆங்கிலேயருக்கு அடிமையாக வேலை செய்வதாக அவர் எண்ணி பணியை ராஜினாமா செய்தார். இந்திய சுதந்திர போராட்டக்காலத்திலிருந்து இன்றுவரை பல சந்தர்ப்பங்களில் நேதாஜியின் பெயரை நாடு உச்சரித்து வருகின்றது. அவரின் புகழை நாடு போற்றும் வண்ணம் அரசும் பலவற்றை செய்துவருகிறது அந்தவகையில் நேதாஜியின் பிறந்த நாளைத் 'தேசிய வல்லமை தினமாக' மத்திய அரசு தற்போது அறிவித்திருக்கிறதுஅடுத்த சில மாதங்களில் நடக்கவிருக்கும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், வங்காளிகளின் வாக்குகளை ஈர்ப்பதற்காகவே நேதாஜி இதுவரை இல்லாத அளவுக்கு மத்திய அரசால் நினைவுகூரப்படுகிறார் என்றொரு விமர்சனமும் எழுந்துள்ளது. 2016 சட்டமன்றத் தேர்தலையொட்டி நேதாஜி தொடர்பான ஆவணங்கள் மத்திய அரசால் பொதுப் பார்வைக்கு வைக்கப்பட்டபோதும் இதே விமர்சனம் முன்வைக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளில் அரசியல் கணக்குகளும் இருக்கலாம். தவறில்லை. ஆனால், தேசநலனுக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்த ஒரு மாபெரும் வீரரின் வாழ்க்கையைக் குறித்து அதிகாரபூர்வமான ஆவணங்கள் வெளிவருவதும், அவர் தேசத்தின் பெருமிதமாக நினைவுகூரப்படுவதும் எல்லா வகையிலும் மிகவும் பொருத்தமானது

நேதாஜி வகுத்த போர் வியூகங்கள், அவற்றில் அவர் அடைந்த வெற்றி தோல்விகள் ஆகியவற்றைக் காட்டிலும் அவரது மரணம் குறித்த விசாரணை கமிஷன்களின் அறிக்கைகளும் அவற்றுக்கு இடையிலான முரண்பாடுகளுமே இன்னும் முடிவடையாத விவாதங்களாக நீண்டுகொண்டிருக்கின்றன. வரலாற்றின் புதிர் முடிச்சுகளுக்குள் சிக்கிக்கொண்டுவிட்டது அவரது மரணம். ஆனால், அவர் வாழ்ந்த காலத்தில் தனது எழுத்திலும் பேச்சிலும் இந்தியாவுக்கு எத்தனையோ வழிகாட்டல்களை வழங்கியிருக்கிறார். அவற்றைப் பின்பற்றுவதற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் இதுபோன்ற மனநிலை நேதாஜியின் குடும்பத்தாருக்கு இல்லை. இந்தியாவை ஆண்ட மற்றும் இப்போது ஆட்சி செய்கிற அரசுகள் நேதாஜியை சரியாக கவுரப்படுத்தவில்லை என்கிற மனவலி நேதாஜியின் வம்சாவளிக்கு உள்ளதை அவர்களின் பேட்டிகளில் இருந்து நாம் அறிந்துகொள்ளலாம்.  

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மகளான Anita B Pfaff இப்பொழுது நேதாஜிக்கு 'பாரத ரத்னா' விருது வழங்குவதை எதிர்த்துள்ளார்இந்தியாவின் உயரிய விருதுகளில் முதன்மையான பாரத ரத்னாவை தான் மதிப்பதாகவும் அந்த விருது உண்மையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு மேலும் பெருமை சேர்ப்பது மட்டுமல்லாமல் அந்த விருதுக்கே ஒரு அழகு நேதாஜி அவர்களால் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். ஆனால் இந்த விருது தனது தந்தைக்கு பல ஆண்டுகள் கிடைக்காமல் இப்போது கிடைப்பது உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பிரபல ஆங்கில பத்திரிக்கைக்கு அவர் பேட்டி கொடுத்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பாரத ரத்னா விருதை தரும்படி முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் அவர்களின் பரிந்துரையும் தாமதமான ஒன்று தான்

இருந்தாலும் அவருக்குப் பின் ஏற்பட்ட சில அரசியல் குழப்பங்களால் அது அப்போது கைவிடப்பட்டது. ரயில்வே அமைச்சகம், ஹவுரா - கல்கா மெயில் ரயிலுக்கு (எண். 12311/12312 ), நேதாஜி எக்ஸ்பிரஸ் என்று பெயர் மாற்றியுள்ளதை தான் மனதார வரவேற்பதாகவும் ஆனால் பாரத ரத்னா விருதை எங்கள் குடும்பத்தினர் யாரும் வாங்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.  "நேதாஜிக்கு பாரத ரத்னா விருது வேண்டாம். அவர் மாயமானதில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க வேண்டும்" என நேதாஜி சுபாஷ் சந்திர போஸின்  கொள்ளுப்பேரன் சந்திர குமார் போஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது
Published by:Ram Sankar
First published: