ரூ.500 கோடி பைனான்ஸூம்.. லீக்கான ஆடியோவும் - எ.வ.வேலு ரெய்டு பின்னணி?

ரூ.500 கோடி பைனான்ஸூம்.. லீக்கான ஆடியோவும் - எ.வ.வேலு  ரெய்டு பின்னணி?

எ.வ.வேலு

எ.வ.வேலு சொத்து விவரம் தொடர்பாக சமீபத்தில் ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோ விவகாரமே ரெய்டுக்கு காரணமாக இருக்கலாம் எனப் பேசப்படுகிறது

  • Share this:
    திருவண்ணாமலை தி.மு.க வேட்பாளர் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அத்தொகுதி  ஏ.வ.வேலுவிற்கு சொந்தமான கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீட்டிலும் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அத்துடன், கரூரில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்திலும் இந்த சோதனை விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    எ.வ.வேலு சொத்து விவரம் தொடர்பாக சமீபத்தில் ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோ விவகாரமே ரெய்டுக்கு காரணமாக இருக்கலாம் எனப் பேசப்படுகிறது. தி.மு.க நிர்வாகி ஒருவர் எ.வ.வேலுவயும் அவரது மகன் கம்பனையும் கடுமையாக தாக்கி பேசிய ஆடியோ ஒன்று சமீபத்தில் லீக் ஆனது. அதில், கையில் பணம் இருந்தால் கழுதைகூட அரசனடி. கைத்தட்ட ஆளிருந்தால் காக்கைக்கூட அழகனடி’னு சொல்ற மாதிரி இருக்கு. எ.வ.வேலுக்கு 8 கல்வி நிறுவனங்கள் இருக்கு. கரூரில் 500 கோடி பைனான்ஸ் . கிராணைட் கம்பெனி, ஸ்பின்னிங் மில், 6 ஆயிரம் ஏக்கர் நிலம், மெடிக்கல் காலேஜ் வேற கட்டுகிறார். 20 வருஷமா மாவட்ட செயலாளர். 6 முறை எம்.எல்.ஏ. ஒரு முறை அமைச்சர். ரத்தம் சிந்தி கட்சி வளர்த்தவனின் வாரிசு யாரும் அரசியலுக்கு வரல. இவங்களுக்கு பணிவிடை செய்யனுமா என்று அந்த ஆடியோ நீள்கிறது.

    இதுகுறித்து அப்போதே விளக்கமளித்த எ.வ.வேலு, கல்வி நிறுவனங்கள் எல்லாம் 25 வருடங்களுக்கு முன்பு திரைப்படம் மூலம் நான் சம்பாதித்த பணத்தில் உருவானது. எனக்கு ஸ்பின்னிங் மில்லும் இல்லை. 6ஆயிரம் ஏக்கர் நிலமும் இல்லை. 500 கோடின்னு சொல்றாங்க 50 கோடியில் கூட பைனான்ஸ் செய்யவில்லை. அறக் கட்டளை மூலமாக வங்கியில் 130 கோடி கடன் வாங்கி மருத்துவமனையை கட்டி வருகிறேன்’எனக் கூறியிருந்தார். எ.வ.வேலுவை கடுமையாக தாக்கி பேசிய அந்த நிர்வாகியும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அந்த ஆடியோவில் வெளியான 500 கோடி மேட்டர்தான் இப்போது ஐடி ரெய்டு வரை வந்திருக்குன்னு கூறப்படுகிறது.
    Published by:Ramprasath H
    First published: